Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார்,
மா நீதியும் சம்பாதித்தார்;
என் சொந்த நீதி வெறுத்தேன்,
இயேசுவின் நாமம் நம்புவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

2. கார் மேகம் அவர் முகத்தை
மறைக்கும் காலம், அவரை
எப்போதும்போல நம்புவேன்,
மாறாதவர் என்றறிவேன்;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

3. மரண வெள்ளம் பொங்கினும்,
என் மாம்சம் சோர்ந்து போயினும்,
உன் வாக்குத்தத்தம் ஆணையும்
என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்;
நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

4. நியாயத்தீர்ப்புக் காலத்தில்
எக்காள சத்தம் கேட்கையில்,
அஞ்சேன் என் மீட்பர் நீதியே
அநீதன் என்னை மூடுமே;
நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான்,
வேறஸ்திபாரம் மணல் தான்.

En Meetpar Ratham Sinthinaar – என் மீட்பர் ரத்தம் சிந்தினார் Lyrics in English

1. En meetpar raththam sinthinaar, maa neethiyum sampaathiththaar; en sontha neethi veraுththaen, Yesuvin naamam nampuvaen; naan nirkum paarai Kristhuthaan, vaerasthipaaram manal thaan. 2. Kaar maekam avar mukaththai maraikkum kaalam, avarai eppothumpola nampuvaen, maaraathavar entarivaen; naan nirkum paarai Kristhu thaan, vaerasthipaaram manal thaan. 3. Marana vellam ponginum, en maamsam sornthu poyinum, un vaakkuththaththam aannaiyum en nenjai aattith thaettidum; nan nirkum paarai Kristhu thaan, vaerasthipaaram manal thaan. 4. Niyaayaththeerppuk kaalaththil ekkaala saththam kaetkaiyil, anjaen en meetpar neethiyae aneethan ennai moodumae; naan nirkum paarai Kristhu thaan, vaerasthipaaram manal thaan.

PowerPoint Presentation Slides for the song En Meetpar Ratham Sinthinaar – என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் மீட்பர் ரத்தம் சிந்தினார் PPT
En Meetpar Ratham Sinthinaar PPT

நிற்கும் பாறை வேறஸ்திபாரம் மணல் கிறிஸ்து மீட்பர் நம்புவேன் ரத்தம் சிந்தினார் மா நீதியும் சம்பாதித்தார் சொந்த நீதி வெறுத்தேன் இயேசுவின் நாமம் கிறிஸ்துதான் கார் English