என் இயேசுவை விடமாட்டேன்
பல்லவி
நான் விடமாட்டேன் என் இயேசுவை.
அனுபல்லவி
வான் புவியாவும் போனாலும்,-அத்தால்
மயங்கியே ஒருக்காலும் மெய்யாய். – நான்
சரணங்கள்
1. முந்தியென் மேலன்பு கூர்ந்தார்; இங்கே
முக்யநன்மைதரச் சேர்ந்தார்; தீய
எந்தனுக்காய்த்தம்மை யீந்தார்; எனக்
கெண்ணருநன்மைகள் நேர்ந்தார்; மெய்யாய். – நான்
2. வானலோகந்தனைத் துறந்தார்; ஏழை
மானிடனாகவே பிறந்தார்; மிக்க
ஈனனெனக்காக இறந்தார்; பேய் மேல்
என்றனுக்காய் ஜெயஞ்சிறந்தார்; மெய்யாய். – நான்
3. மேசியாவுக் கிணையுண்டோ? அவர்
வேதத்துக்கொப்பு கற்கண்டோ? எனின்
நேசாசமுகம் பூச்செண்டோ? இந்த
நீசனத்தில் மொய்க்கும் வண்டோ? மெய்யாய். – நான்
4. லோகமெனை உதைத்தாலும், பொல்லா
லோபிகள் துஷ்டர் மொய்த்தாலும், பசி
தாகநோயும் வதைத்தாலும், இந்தத்
தாரணியோர் சிதைத்தாலும், மெய்யாய். – நான்
En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன் Lyrics in English
En Yesuvai vidamaattaேn pallavi naan vidamaattaேn en Yesuvai. Anupallavi vaan puviyaavum ponaalum,-aththaal mayangiyae orukkaalum meyyaay. – naan saranangal 1. Munthiyen maelanpu koornthaar; ingae mukyananmaitharach sernthaar; theeya enthanukkaayththammai yeenthaar; enak kennnarunanmaikal naernthaar; meyyaay. – naan 2. Vaanalokanthanaith thuranthaar; aelai maanidanaakavae piranthaar; mikka eenanenakkaaka iranthaar; paey mael entanukkaay jeyanjiranthaar; meyyaay. – naan 3. Maesiyaavuk kinnaiyunntoo? Avar vaethaththukkoppu karkanntoo? Enin naesaasamukam poochchenntoo? Intha neesanaththil moykkum vanntoo? Meyyaay. – naan 4. Lokamenai uthaiththaalum, pollaa lopikal thushdar moyththaalum, pasi thaakaNnoyum vathaiththaalum, inthath thaaranniyor sithaiththaalum, meyyaay. – naan
PowerPoint Presentation Slides for the song En Yesuvai Vidamattean – என் இயேசுவை விடமாட்டேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் இயேசுவை விடமாட்டேன் PPT
En Yesuvai Vidamattean PPT

