பல்லவி
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா,
எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா.
அனுபல்லவி
என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை
வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள்
சரணங்கள்
1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன்
ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே;
இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம்
அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள்
2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர்
தந்து ரட்சித்த கோனே, தாங்கையா;
சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள்
சிந்தை திரும்பிச் சீவ பாதையில் சென்றொழுக, – எங்கள்
3. நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்;
மோசம் வராது தின முற்றுமே
தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி,
யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம். – எங்கள்
எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam Lyrics in English
Pallavi
Engal vinnnappam kael aiyaa, aesunaathaiyaa,
Engal vinnnappam kael aiyaa.
Anupallavi
Entan thiru raththaththaal ukanthu neer konnda Sabai
Vanthun patham panninthu vanthiththuch seythavangal. – engal
Saranangal
1. Irul sool thol puvi meethu, aekanae,-ilangidavun
Oru sollaal oliveesach seythathaiyae;
Irulum arulu nirai ellaa manudar nenjam
Arul oliveesi intu aththan patham panniya. – engal
2. Manthaiyaadu sitharip ponathai-maraுki, uyir
Thanthu ratchiththa konae, thaangaiyaa;
Sinthai thavari vali sitharith thiriyum paerkal
Sinthai thirumpich seeva paathaiyil sentaொluka, – engal
3. Naesam vaiththaalum neerae manthaiyai-nekilnthidaamal;
Mosam varaathu thina muttaுmae
Thaasar pannivitaikal thavaraathu vaaykkumpati,
Yaesuvae, ninnatiyaarkgeeyum thaevaaseervaatham. – engal
PowerPoint Presentation Slides for the song எங்கள் விண்ணப்பம் – Engal Vinnappam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் விண்ணப்பம் PPT
Engal Vinnappam PPT

