பல்லவி
என்ன செய்குவேன் ஏழையடியேன்
அனுபல்லவி
அண்ணலேசையா – அற்பனானையா
என்னைப்பொருளாய் – எண்ணினதற்கீடாய்
சரணங்கள்
1. அஞ்ஞானத்தில் தானே – அமிழ்ந்திருந்தேனே!
அகக் கண்கெட்டு – அலைந்தேன் முற்றுமே;
மெஞ்ஞான மூட்டி – வெளிச்சமுங் காட்டி
என்னை இரட்சித்தாய்! இதற்கு நான் ஈடாய் – என்ன
2. மாமிச இச்சை – லோகம் பேராசை
மயக்கங் கொண்டு – மாசில் புரண்டு
தீமைபுரியச் சென்றோனை வலியத்
திருப்பி இழுத்த – செயலிதற்கு ஈடு – என்ன
3. செத்த நான் பிழைக்க – ஜீவனை அளிக்க
திவ்ய நாதனே – தேவ சுதனே
மெத்தப் பாடுபட்டு – மீட்க என்னையே
சித்தம் வைத்தாயே – சேயன் இதற்கு ஈடு – என்ன
4. ஆத்மா தேகம் ஆவி – அனைத்தும் இப்பாவி,
மீட்பா இயேசுவே! மேசியா கோவே!
பூர்த்தியாகவே படைத்தேனே தேவே!
ஏற்றுக்கொள்ளையா – ஏழையைக் காரையா! – என்ன
Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன் Lyrics in English
Pallavi
Enna seykuvaen aelaiyatiyaen
Anupallavi
Annnalaesaiyaa – arpanaanaiyaa
Ennaipporulaay – ennnninathargeedaay
Saranangal
1. Anjnjaanaththil thaanae – amilnthirunthaenae!
Akak kannkettu – alainthaen muttaுmae;
Menjnjaana mootti – velichchamung kaatti
Ennai iratchiththaay! Itharku naan eedaay – enna
2. Maamisa ichchaை – lokam paeraasai
Mayakkang konndu – maasil puranndu
Theemaipuriyach sentonai valiyath
Thiruppi iluththa – seyalitharku eedu – enna
3. Seththa naan pilaikka – jeevanai alikka
Thivya naathanae – thaeva suthanae
Meththap paadupattu – meetka ennaiyae
Siththam vaiththaayae – seyan itharku eedu – enna
4. Aathmaa thaekam aavi – anaiththum ippaavi,
Meetpaa Yesuvae! Maesiyaa kovae!
Poorththiyaakavae pataiththaenae thaevae!
Aettaுkkollaiyaa – aelaiyaik kaaraiyaa! – enna
PowerPoint Presentation Slides for the song Enna Seiguvean Yealai Adiyean – என்ன செய்குவேன் ஏழையடியேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்ன செய்குவேன் ஏழையடியேன் PPT
Enna Seiguvean Yealai Adiyean PPT

