பல்லவி
என்னாலுரைக்க முடியாதே-என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே.
அனுபல்லவி
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றினார் பவத்தினை, தேற்றினார் அகத்தினை – என்
சரணங்கள்
1. காட்டினில் அலைந்த ஆடு நானே,-எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே;
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே,-இனி
வியந்து விரைந்து பாடுவேனே.
நாட்டினில் எனைத்தொடர் ஓநாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேனே – என்
2. பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே,-பாவப்
பயங்கள் சந்தேகந் தொலைத்தாரே,
ஆவல் ஆசையும் அகற்றினாரே,-தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே;
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க,
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும். – என்
3. சத்துருவினால் விளைந்த கேட்டை-எல்லாம்
தாண்டிவந்தேன், யேசு பெருங்கோட்டை.
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப்-பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை;
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன், அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேன் இனி. – என்
4. ஆசைமிகும் யேசு பெருமானே!-பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே!
வாச லீலிப்பூவே சீவதேனே!-வான
மன்னாவே இலங்கு கதிரோனே!
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழும்பும்
நேசத்தால் மகிழ்ந்றென்தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம் – என்
Ennaal Uraika Mudiyathae Entran- என்னாலுரைக்க முடியாதே என்றன் Lyrics in English
Pallavi
Ennaaluraikka mutiyaathae-entan
Iruthaya makilchchi ippothae.
Anupallavi
Munnaalae paavaththuyaril moolkina paethaiyai yaesu
Mannavanaar thaetikkanndu maattinaar pavaththinai, thaettinaar akaththinai – en
Saranangal
1. Kaattinil alaintha aadu naanae,-enaik
Kanndu pitiththavar yaesu konae;
Veettinul makimaiyaik kanntaenae,-ini
Viyanthu virainthu paaduvaenae.
Naattinil enaiththodar onaay puli yaavum verunndu
Ottampitith thappaalae nintuttitho paarththena vetti atainthaenae – en
2. Paavangal anaiththum manniththaarae,-paavap
Payangal santhaekan tholaiththaarae,
Aaval aasaiyum akattinaarae,-thaeva
Anpinai akaththul oottinaarae;
Thaeva vasananjaெlikkach sepaththiyaanangal sirakka,
Aavi ullilaekalikka aaduthae kaalkalum paaduthae naavathum. – en
3. Saththuruvinaal vilaintha kaettaை-ellaam
Thaanntivanthaen, yaesu perungaோttaை.
Paktharuk kaayaththam seytha veettaைp-perap
Paarththirukkinten parama naattaை;
Iththarai vasikkung kaalam aththanaiyum yaesukkenaith
Thaththam seythuvittaேn, avar thanjamae kaavil thaan
Anjitaen ini. – en
4. Aasaimikum yaesu perumaanae!-pathi
Naayiram paeril sirantha konae!
Vaasa leelippoovae seevathaenae!-vaana
Mannaavae ilangu kathironae!
Maasarakkaluvi enthan manathul vasiththelumpum
Naesaththaal makilnraெnthentum needuvaay kirupaikal
Sooduvaay thoththiram – en
PowerPoint Presentation Slides for the song Ennaal Uraika Mudiyathae Entran- என்னாலுரைக்க முடியாதே என்றன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னாலுரைக்க முடியாதே என்றன் PPT
Ennaal Uraika Mudiyathae Entran PPT

