என்னை மறவா இயேசு நாதா
உந்தன் தயவால் என்னை நடத்தும்
1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!
ஆபத்திலே அரும் துணையே
பாதைக்கு நல்லதீபமிதே — என்னை
2. பயப்படாதே வலக்கரத்தாலே
பாதுகாப்பேன் என்றதாலே , ஸ்தோத்திரம்!
பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
பறிக்க இயலாதெவரு மென்னை — என்னை
3. தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!
வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
உன்னதா எந்தன் புகலிடமே — என்னை
4. திக்கற்றோராய்க் கைவிடேனே
கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்!
நீர் அறியா தேதும் நேரிடா
என் தலைமுடியும் எண்ணினீரே — என்னை
5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
அக்கினியின் மதிலாக
அன்பரே என்னைக் காத்திடுமே — என்னை
6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
பறந்திடுமே உம் நாமத்திலே
பரனே எனக்காய் ஜெயக்கொடியே — என்னை
7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
எப்படியும் உம் வருகையிலே
ஏழை என்னை சேர்த்திடுமே — என்னை
Ennai Maravaa Yesu Naathaa Lyrics in English
Ennai maravaa Yesu naathaa unthan thayavaal ennai nadaththum 1. Valla jeeva vaakkuththaththangal varainthenakkaay eenthathaalae Sthoththiram! Aapaththilae arum thunnaiyae paathaikku nallatheepamithae — ennai 2. Payappadaathae valakkaraththaalae paathukaappaen entathaalae , Sthoththiram! Paasam enmael neer vaiththathinaal parikka iyalaathevaru mennai — ennai 3. Thaay than seyai maranthuvittalum maravaen unnai entathaalae Sthoththiram! Varaintheeranto um ullangaiyil unnathaa enthan pukalidamae — ennai 4. Thikkattaோraayk kaivitaenae kalangiteerae entathaalae Sthoththiram! Neer ariyaa thaethum naeridaa en thalaimutiyum ennnnineerae — ennai 5. Unnaith thoduvon en kannmanniyaith thoduvathaaka uraiththathaalae Sthoththiram akkiniyin mathilaaka anparae ennaik kaaththidumae — ennai 6. Unakkethiraay elumpum aayutham vaayththidaathae entathaalae Sthoththiram paranthidumae um naamaththilae paranae enakkaay jeyakkotiyae — ennai 7. Ennai muttaுm oppuviththaenae aettaு entum nadaththuveerae Sthoththiram eppatiyum um varukaiyilae aelai ennai serththidumae — ennai
PowerPoint Presentation Slides for the song Ennai Maravaa Yesu Naathaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை மறவா இயேசு நாதா PPT
Ennai Maravaa Yesu Naathaa PPT

