என்னாலுரைக்க முடியாதே – என்றன்
இருதய மகிழ்ச்சி இப்போதே
முன்னாலே பாவத்துயரில் மூழ்கின பேதையை யேசு
மன்னவனார் தேடிக்கண்டு மாற்றைனார் பவத்தினை
தேற்றினார் அகத்தினை
காட்டினில் அலைந்த ஆடுநானே – எனைக்
கண்டு பிடித்தவர் யேசு கோனே
வீட்டினுள் மகிமையைக் கண்டேனே – இனி
வியந்து விரைந்து பாடுவேனே
நாட்டினில் எனைத்தொடர் ஓனாய் புலி யாவும் வெருண்டு
ஓட்டம்பிடித் தப்பாலே நின்றுற்றிதோ பார்த்தென வெற்றி அடைந்தேன்
பாவங்கள் அனைத்தும் மன்னித்தாரே – பாவப்
பயங்கல் சந்தேகந் தொலைத்தாரே
ஆவல் ஆசையும் அகற்றினாரே – தேவ
அன்பினை அகத்துள் ஊற்றினாரே
தேவ வசனஞ்செழிக்கச் செபத்தியானங்கள் சிறக்க
ஆவி உள்ளிலேகளிக்க ஆடுதே கால்களும் பாடுதே நாவதும்
சத்துருவினால் விளைந்த கோட்டை – எல்லாம்
தாண்டிவந்தேன் யேசு பெருங்கோட்டை
பக்தருக் காயத்தம் செய்த வீட்டைப் – பெறப்
பார்த்திருக்கின்றேன் பரம நாட்டை
இத்தரை வசிக்குங் காலம் அத்தனையும் யேசுக்கெனைத்
தத்தம் செய்துவிட்டேன் அவர் தஞ்சமே காவில் தான்
அஞ்சிடேனே இனி
ஆசை மிகும் யேசு பெருமானே – பதி
னாயிரம் பேரில் சிறந்த கோனே
வாச லீலிப்பீவே சீவதேனே – வான
மன்னாவே இலங்கு கதிரோனே
மாசறக்கழுவி எந்தன் மனதுள் வசித்தெழுப்பும்
நேசத்தால் மகிழ்ந்றென் தென்றும் நீடுவாய் கிருபைகள்
சூடுவாய் தோத்திரம்
Ennaluraikka Mudiyade Lyrics in English
Ennaaluraikka mutiyaathae – entan iruthaya makilchchi ippothaemunnaalae paavaththuyaril moolkina paethaiyai yaesu mannavanaar thaetikkanndu maattaைnaar pavaththinai thaettinaar akaththinaikaattinil alaintha aadunaanae – enaik kanndu pitiththavar yaesu konae veettinul makimaiyaik kanntaenae – ini viyanthu virainthu paaduvaenae naattinil enaiththodar onaay puli yaavum verunndu ottampitith thappaalae nintuttitho paarththena vetti atainthaenpaavangal anaiththum manniththaarae – paavap payangal santhaekan tholaiththaarae aaval aasaiyum akattinaarae – thaeva anpinai akaththul oottinaarae thaeva vasananjaெlikkach sepaththiyaanangal sirakka aavi ullilaekalikka aaduthae kaalkalum paaduthae naavathumsaththuruvinaal vilaintha kottaை – ellaam thaanntivanthaen yaesu perungaோttaை paktharuk kaayaththam seytha veettaைp – perap paarththirukkinten parama naattaை iththarai vasikkung kaalam aththanaiyum yaesukkenaith thaththam seythuvittaேn avar thanjamae kaavil thaan anjitaenae iniaasai mikum yaesu perumaanae – pathi naayiram paeril sirantha konae vaasa leelippeevae seevathaenae – vaana mannaavae ilangu kathironae maasarakkaluvi enthan manathul vasiththeluppum naesaththaal makilnraெn thentum needuvaay kirupaikal sooduvaay thoththiram
PowerPoint Presentation Slides for the song Ennaluraikka Mudiyade
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னாலுரைக்க முடியாதே என்றன் PPT
Ennaluraikka Mudiyade PPT

