எந்த வேளையும் அடியனோடிரும்
பல்லவி
ஆதி யாம் மகா ராசனே,-எந்த வேளையும்
அடிய னோடிரும், ஈசனே
அனுபல்லவி
தீதில்லா சருவேசா, தேசுறும் பிரகாசா,
பாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால், – ஆதியாம்
சரணங்கள்
1. பாவி பெலனால், ஐயனே,-நின்றால் என்னைப்
பகைவர் ஜெயிப்பார், மெய்யனே;
தேவா, துணை நீர் ஐயனே;-சிறியனிடம்
சேர்ந்தே வசியும், துய்யனே,
மேவும் தஞ்சம் எனக்கு வேண்டும், காவலன் நீரே;
சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும். – ஆதியாம்
2. இரக்கம் பொழிய வாருமே,-கிருபையாக,
இறைவா, என்னிடம் சேருமே;
உருக்கம் நிறைந்த நீருமே;-அனவரதம்
உந்தம் அருளைத் தாருமே;
செருக்காய் எம்மீ திகலோர் சேதம் செய்ய நினைக்கும்
திருக்கை அகற்றி என்னில் தினமும் அருள்புரியும். – ஆதியாம்
Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும் Lyrics in English
Entha vaelaiyum atiyanotirum
Pallavi
Aathi yaam makaa raasanae,-entha vaelaiyum
Atiya notirum, eesanae
Anupallavi
Theethillaa saruvaesaa, thaesuraுm pirakaasaa,
Paathakan yaan miku palaveenan aanathaal, – aathiyaam
Saranangal
1. Paavi pelanaal, aiyanae,-nintal ennaip
Pakaivar jeyippaar, meyyanae;
Thaevaa, thunnai neer aiyanae;-siriyanidam
Sernthae vasiyum, thuyyanae,
Maevum thanjam enakku vaenndum, kaavalan neerae;
Saavuvaraiyum ennaith thaangi aravannaiyum. – aathiyaam
2. Irakkam poliya vaarumae,-kirupaiyaaka,
Iraivaa, ennidam serumae;
Urukkam niraintha neerumae;-anavaratham
Untham arulaith thaarumae;
Serukkaay emmee thikalor setham seyya ninaikkum
Thirukkai akatti ennil thinamum arulpuriyum. – aathiyaam
PowerPoint Presentation Slides for the song Entha Vealaiyum Adiyanodirum – எந்த வேளையும் அடியனோடிரும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த வேளையும் அடியனோடிரும் PPT
Entha Vealaiyum Adiyanodirum PPT

