1. எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க
இயேசுவைப் பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமளதைலம்
அவரையே நேசிக்கிறேன்
அல்லேலுயா துதி அல்லேலூயா — எந்தன்
அண்ணலாம் இயேசுவைப் பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தனைக் கொண்டாடுவேன்
2. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக்கென்றும்
சுகபெலன் அளித்தாரே — அல்லேலூயா
3. சிலவேளை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடும்கோபம் நீங்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே — அல்லேலூயா
4. பஞ்சகாலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே யானாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே — அல்லேலூயா
5. களிப்போடு விரைந்தெம்மைச் சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாளும் வானத்தை நோக்கி
அனுதினம் காத்திருப்போம் — அல்லேலூயா
Enthan Ullam Puthukkaviyaalae Lyrics in English
1. Enthan ullam puthukkaviyaalae ponga Yesuvaip paadiduvaen avar naamam oottaுnnda parimalathailam avaraiyae naesikkiraேn allaeluyaa thuthi Alleluya — enthan annnalaam Yesuvaip paadiduvaen iththanai kirupaikal niththamum aruliya karththanaik konndaaduvaen 2. Senta kaalam muluvathum kaaththaarae or sethamum anukaamal sonthamaaka aaseer polinthenakkentum sukapelan aliththaarae — Alleluya 3. Silavaelai imaippoluthae tham mukaththai sirushtikar maraiththaarae kadumkopam neengi thirumpavum enmael kirupaiyum polinthaarae — Alleluya 4. Panjakaalam perukida naernthaalum thaam thanjamae yaanaarae angum ingum Nnoykal paravi vanthaalum ataikkalam aliththaarae — Alleluya 5. Kalippodu virainthemmaich serththida en karththarae varuvaarae aavalodu naalum vaanaththai Nnokki anuthinam kaaththiruppom — Alleluya
PowerPoint Presentation Slides for the song Enthan Ullam Puthukkaviyaalae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் உள்ளம் புதுக்கவியாலே பொங்க PPT
Enthan Ullam Puthukkaviyaalae PPT

