Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எவ்வண்ணமாக கர்த்தரே

எவ்வண்ணமாக, கர்த்தரே,
உம்மை வணங்குவேன் ?
தெய்வீக ஈவைப் பெறவே
ஈடென தருவேன் ?

அநேக காணிக்கைகளால்
உம கோபம் மாறுமோ ?
நான் புண்ணிய கிரியை செய்வதால்
கடாட்சம் வைப்பிரோ ?

பலியின் ரத்தம் வெள்ளமாய்
பாய்ந்தாலும் , பாவத்தை
நிவிர்த்தி செய்து சுத்தமாய்
ரட்சிக்கமாட்டாதே.

நான் குற்றவாளி , ஆகையால்
என்பேரில் கோபமே
நிலைத்திருந்து சாபத்தால்
அளித்தால் நியாயமே .

ஆனால் என் பாவம் சுமந்து
ரட்சகர் மரித்தார்;
சாபத்தால் தலை குனிந்து
தம் ஆவியை விட்டார்.

இப்போதும் பரலோகத்தில்
வேண்டுதல் செய்கிறார் ;
உம திவ்விய சந்நிதானத்தில்
என்னை நினைக்கிறார் .

இவ்வண்ணமாக கர்த்தரே ,
உம்மை வணங்குவேன்
என் நீதி இயேசுகிறிஸ்துவே ,
அவரைப் பற்றினேன்

Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே Lyrics in English

evvannnamaaka, karththarae,
ummai vananguvaen ?
theyveeka eevaip peravae
eedena tharuvaen ?

anaeka kaannikkaikalaal
uma kopam maarumo ?
naan punnnniya kiriyai seyvathaal
kadaatcham vaippiro ?

paliyin raththam vellamaay
paaynthaalum , paavaththai
nivirththi seythu suththamaay
ratchikkamaattathae.

naan kuttavaali , aakaiyaal
enpaeril kopamae
nilaiththirunthu saapaththaal
aliththaal niyaayamae .

aanaal en paavam sumanthu
ratchakar mariththaar;
saapaththaal thalai kuninthu
tham aaviyai vittar.

ippothum paralokaththil
vaennduthal seykiraar ;
uma thivviya sannithaanaththil
ennai ninaikkiraar .

ivvannnamaaka karththarae ,
ummai vananguvaen
en neethi Yesukiristhuvae ,
avaraip pattinaen

PowerPoint Presentation Slides for the song Evvannamaka Kartharae- எவ்வண்ணமாக கர்த்தரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எவ்வண்ணமாக கர்த்தரே PPT
Evvannamaka Kartharae PPT

கர்த்தரே உம்மை வணங்குவேன் உம சாபத்தால் எவ்வண்ணமாக தெய்வீக ஈவைப் பெறவே ஈடென தருவேன் அநேக காணிக்கைகளால் கோபம் மாறுமோ புண்ணிய கிரியை செய்வதால் கடாட்சம் English