பல்லவி
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திரு
நாமம் ஜலமோடு சேர்.
சரணங்கள்
1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டு
வாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,
ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,
நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான
2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவே
சத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்து
சின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்
செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான
3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்
கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!
அண்ணலார் பரிசுத்தாவி தன்னையுமிணைக்கு நேர்மை
அறிந்தவரே யிருகண் தெரிந்தவர் திருவருள் – ஞான
Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே Lyrics in English
pallavi
njaanasnaana maa njaanaththiraviyamae; thiru
naamam jalamodu ser.
saranangal
1. vaanaparan yaesulaka maanidarkkaayp paadupattu
vaayththanalam ilavasamaayk koduththida,
njaanamuda naesakala maanidaraich seedaraakka,
nalla thaeva naamamathaich sollijalam vaarumenta – njaana
2. thannnneeraaviyaal pirakkaar vinndalam peraarenavae
saththiyan uraiththamoli suththamunarnthu
sinnavar periyavarkal seeriyarkal pooriyarkal
semmaipera moolkuvarkal immulukkil vaethamurai – njaana
3. kannnninaalae kaannpathenna? thannnneerthaanaeyentu sollik
karththani nuraimarappa theththanai mosam!
annnalaar parisuththaavi thannaiyuminnaikku naermai
arinthavarae yirukann therinthavar thiruvarul – njaana
PowerPoint Presentation Slides for the song Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஞானஸ்நான மா ஞானத்திரவியமே PPT
Gnanasnaana Maa Gnanathiraviyamae PPT