Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தாவை நம்புவோரை

1.கர்த்தாவை நம்புவோரை
ஓர்க்காலும் கைவிடார்,
பொல்லாரின் சீறுமாற்றை
வீணாக்கிப் போடுவார்;
சன்மார்க்கரைப் பலத்த
கையால் தயாபரர்
ரட்சித்துத் தாழ்ச்சியற்ற
அன்பாய் விசாரிப்பார்.

2.கர்த்தாவின் சித்தத்துக்கு
கீழ்ப்பட்டடங்குவேன்;
அப்போ நான் ஜீவனுக்கு
நேரே நடக்கிறேன்;
லௌகீக வாழ்வின் பாதை
வேண்டாம், நான் இயேசுவை
பின்பற்றி, இங்கே வாதை
சகித்தால், மாநன்மை.

3. என்மேலே பாரமாக
வரும் இக்கட்டிலே
பராபரன் அன்பாக
என்னோடிருப்பாரே;
பொறுக்கிற வரத்தை
அவரிடம் கேட்பேன்,
அவ்விதமாய் இக்கட்டை
சகித்து வெல்லுவென்.

4. கசப்பும் கர்த்தராலே
வரும், நான் பின்வாங்கேன்;
ஜெபத்தில் ஆசையோடே
விண்ணப்பம் பண்ணுவேன்;
அப்போது தயவாக
காப்பாரே, கைவிடார்;
இக்கட்டு பெரிதாக
போம்போது தேற்றுவார்.

5.அநேகர் ஆசைகொள்ளும்
பொருளை வாஞ்சியேன்;
கர்த்தாவின் வார்த்தை சொல்லும்
மெய்ப்பொருள் நாடுவேன்;
என் பொக்கிஷம், என் செல்வம்,
என் ஆஸ்த்தி கிறிஸ்துவே;
என் பாக்கியம், பேரின்பம்,
எல்லாம் என் மீட்பரே.

6.என் இயேசுவை நான் பற்றி
தொடர்வேன் ஆவலாய்;
என் சாபத்தை அகற்றி
ரட்சித்தார் நேசமாய்;
நான் தப்ப எனக்காக
தம் ரத்தம் சிந்தினார்;

Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை Lyrics in English

1.karththaavai nampuvorai
orkkaalum kaividaar,
pollaarin seerumaattaை
veennaakkip poduvaar;
sanmaarkkaraip palaththa
kaiyaal thayaaparar
ratchiththuth thaalchchiyatta
anpaay visaarippaar.

2.karththaavin siththaththukku
geelppattadanguvaen;
appo naan jeevanukku
naerae nadakkiraen;
laugeeka vaalvin paathai
vaenndaam, naan Yesuvai
pinpatti, ingae vaathai
sakiththaal, maananmai.

3. enmaelae paaramaaka
varum ikkattilae
paraaparan anpaaka
ennotiruppaarae;
porukkira varaththai
avaridam kaetpaen,
avvithamaay ikkattaை
sakiththu velluven.

4. kasappum karththaraalae
varum, naan pinvaangaen;
jepaththil aasaiyotae
vinnnappam pannnuvaen;
appothu thayavaaka
kaappaarae, kaividaar;
ikkattu perithaaka
pompothu thaettuvaar.

5.anaekar aasaikollum
porulai vaanjiyaen;
karththaavin vaarththai sollum
meypporul naaduvaen;
en pokkisham, en selvam,
en aasththi kiristhuvae;
en paakkiyam, paerinpam,
ellaam en meetparae.

6.en Yesuvai naan patti
thodarvaen aavalaay;
en saapaththai akatti
ratchiththaar naesamaay;
naan thappa enakkaaka
tham raththam sinthinaar;

PowerPoint Presentation Slides for the song Karthaavai Nambuvorai – கர்த்தாவை நம்புவோரை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தாவை நம்புவோரை PPT
Karthaavai Nambuvorai PPT

கைவிடார் கர்த்தாவின் இயேசுவை கர்த்தாவை நம்புவோரை ஓர்க்காலும் பொல்லாரின் சீறுமாற்றை வீணாக்கிப் போடுவார் சன்மார்க்கரைப் பலத்த கையால் தயாபரர் ரட்சித்துத் தாழ்ச்சியற்ற அன்பாய் விசாரிப்பார் சித்தத்துக்கு English