Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தருக்குக் காணிக்கையிதோ

பல்லவி

கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!

அனுபல்லவி

கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்,
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு

சரணங்கள்

1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய்
அறிவு வளர வேணும்,
தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்,

கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்,
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு

2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு
அனைத்திலும் தந்ததையே!
மா பிரியமாக வாசித்தேன்,-இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே,

ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம்த மதடி கீழ்த்
தத்தளித்த தெல்லாங் கேட்டேன். – கர்த்தருக்கு

3. கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்-இதோ! இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்,
நஞ்சைவிளைவினி லோர்பாகம்-சேர்த்து வைத்தேனான்,
நாலாவகை வரத்திற் கொஞ்சம்,

புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
தித்தனைத் தொகையுமாச்சு. – கர்த்தருக்கு

Kartharuku Kaanikai Itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ Lyrics in English

Pallavi karththarukkuk kaannikkaiyitho! Thammaiyae thantha karththarukkuk kaannikkai! Itho! Anupallavi karththarukkuk kaannikkaiyaayp paththilontu naan koduppaen, saththiyak Kristhu naathar Sabaiyai varththikkavaenum. – karththarukku saranangal 1. Aniyaayam neenga vaenum,-ulakilae mey arivu valara vaenum, thaniyaeka meyththaevanai-narthaesaththil sakalarum potta vaenum, kanivaayp pothakar vaetham kattarinthu sollavaenum, kanakkaay ithan selavu katti varavaenum, ayyaa! – karththarukku 2. Abraham paththilontaiyae-melkise thaekkuk-ku anaiththilum thanthathaiyae! Maa piriyamaaka vaasiththaen,-israyael peththael vallarkuch seyporuththanaiyae, aanndavar paran avarkat kanaiththum aaseervathiththuth thaaparamtha mathati geelth thaththaliththa thellaang kaettaேn. – karththarukku 3. Konjang konjamaakach serththaen-itho! Iththanai kootinathaik konntitho vanthaen, nanjaivilaivini lorpaakam-serththu vaiththaenaan, naalaavakai varaththir konjam, punjai pala pokaththilum pottu vaiththae naankuraுnni puththakak kanakkil kannda thiththanaith thokaiyumaachchu. – karththarukku

PowerPoint Presentation Slides for the song Kartharuku Kaanikai Itho – கர்த்தருக்குக் காணிக்கையிதோ

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தருக்குக் காணிக்கையிதோ PPT
Kartharuku Kaanikai Itho PPT

கர்த்தருக்கு கர்த்தருக்குக் வேணும் பல்லவி காணிக்கையிதோ தம்மையே தந்த காணிக்கை இதோ அனுபல்லவி காணிக்கையாய்ப் பத்திலொன்று கொடுப்பேன் சத்தியக் கிறிஸ்து நாதர் சபையை வர்த்திக்கவேணும் சரணங்கள் English