Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் , வல்லமை , மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா , குமாரன் பரிசுத்தாவியின்
புதிய ஆசீர்வாதம் பெருக — கர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்

கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கின்றார் — கர்த்தரின்

3. அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் — கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் — கர்த்தரின்

Karththarin Saththam Vallamaiyullathu Lyrics in English

Karththarin saththam vallamaiyullathu
Karththarin saththam makaththuvamullathu
Thirannda thannnneer mael jalap piravaakam mael
Tharparan mulangukintar Alleluya!

1. Palavaankalin puththirarae
Parisuththa alangaaramaay
Kanam , vallamai , makimai
Karththarukkae seluththidungal
Pithaa , kumaaran Parisuththaாviyin
Puthiya aaseervaatham peruka — karththarin

2. Kaethuru marangalaiyum
Leepanonin marangalaiyum
Karththarin valiya saththam
Koramaaka murikkintathu
Senai athipan namathu munnilai
Jeya veeranaakach selkintar — karththarin

3. Akkini juvaalaikalai
Avar saththam pilakkintathu
Kaathaes vanaanthiraththai
Karththar saththam athirappannnum
Raajaavaakavae Karththar veettiruppaar
Raajareeka mengum jolikkum — karththarin

4. Pennmaankal eenumpati
Pelaththa kiriyai seythidum
Kaattaைyum veliyaakkum
Karththarin valiya saththam
Pelan koduththu samaathaanameenthu
Paran emmai aaseervathippaar — karththarin

PowerPoint Presentation Slides for the song Karththarin Saththam Vallamaiyullathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது PPT
Karththarin Saththam Vallamaiyullathu PPT

கர்த்தரின் சத்தம் மரங்களையும் வலிய கர்த்தர் வல்லமையுள்ளது மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர் ஜலப் பிரவாகம் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா பலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் English