1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.
2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.
3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.
4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.
5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.
6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.
7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.
8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.
Kathiravan Elukinta Kaalaiyil Lyrics in English
1. kathiravan elukinta kaalaiyil iraivanaith
thuthi seyya manamae – elunthiraay.
2. varanndu thannnneer atta vanam inthap puvithanil
thirannda thayai thaevai- naaduvaen.
3. kadavulin vallamai,kana makimai kaanum
idamathil selvathae – en ishdam.
4. jeevanaip paarkkilum thaevanin kaathalai
aavalaay naati naan – pottuvaen.
5. aayul pariyantham aanndavar naamaththai
naeyamaay paati naan – uyarththuvaen.
6. meththaiyil raachchaாmam niththirai kolkaiyil
karththarin seyalkalai – sinthippaen.
7. allum pakalum naan avar settaைkalin geelth
thollaikku neengiyae – othunguvaen.
8. aaththumam thaevanai anntik kolla avar
naeththirampol ennaik – kaakkiraar.
PowerPoint Presentation Slides for the song Kathiravan Elukinta Kaalaiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் PPT
Kathiravan Elukinta Kaalaiyil PPT