Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

குருசினில் தொங்கியே குருதியும் வடிய

குருசினில் தொங்கியே குருதியும் வடிய
கொல்கதா மலைதனிலே – நம்
குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி
கொள்ளாய் கண் கொண்டு

1. சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தே
சிலுவையில் சேர்த்ததையோ – தீயர்
திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்
சேனைத்திரள் சூழ – குருசினில்

2. பாதகர் நடுவில் பாவியினேசன்
பாதகன் போல் தொங்க – யூத
பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
படுத்திய கொடுமைதனை – குருசினில்

3. சந்திர சூரிய சகல வான் சேனைகள்
சகியாமல் நாணுதையோ – தேவ
சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
துடிக்கா நெஞ்சுண்டோ – குருசினில்

4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
இறைவன் விலாவதிலே – அவர்
தீட்டிய தீட்சைக் குருதியும் ஜலமும்
திறந்தூற்றோடுது பார் – குருசினில்

5. எருசலேம் மாதே மறுகி நீயழுது
ஏங்கிப் புலம்பலையோ – நின்
எருசலையதிபன் இள மணவாளன்
எடுத்த கோல மிதோ – குருசினில்

Kurusinil Thongiye Kurudhiyum Lyrics in English

Kurusinil thongiyae kuruthiyum vatiya kolkathaa malaithanilae – nam kuruvaesu suvaami kodun thuyar paavi kollaay kann konndu 1. Sirasinil mulmuti uraுththida arainthae siluvaiyil serththathaiyo – theeyar thirukkarang kaalkalil aannikalatiththaar senaiththiral soola – kurusinil 2. Paathakar naduvil paaviyinaesan paathakan pol thonga – yootha paathakar parikaasangal pannnnip paduththiya kodumaithanai – kurusinil 3. Santhira sooriya sakala vaan senaikal sakiyaamal naanuthaiyo – thaeva sunthara maintha nuyir vidukaatchiyaal thutikkaa nenjunntoo – kurusinil 4. Eettiyaal sevakan ettiyae kuththa iraivan vilaavathilae – avar theettiya theetchaைk kuruthiyum jalamum thiranthoottaோduthu paar – kurusinil 5. Jerusalem maathae maraுki neeyaluthu aengip pulampalaiyo – nin erusalaiyathipan ila manavaalan eduththa kola mitho – kurusinil

PowerPoint Presentation Slides for the song Kurusinil Thongiye Kurudhiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download குருசினில் தொங்கியே குருதியும் வடிய PPT
Kurusinil Thongiye Kurudhiyum PPT

குருசினில் குருதியும் தொங்கியே வடியகொல்கதா மலைதனிலே நம்குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவிகொள்ளாய் கண் சிரசினில் முள்முடி உறுத்திட அறைந்தேசிலுவையில் சேர்த்ததையோ தீயர்திருக்கரங் கால்களில் English