Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாயையில் மனம் ஓடவையாதே உன்னை

1. மாயையில் மனம் ஓடவையாதே – உன்னை
விட்டாலது கொஞ்சம் நில்லாது;
பாவையில் கட்டின கயிற்றைப் போல் – அகற்றுப்
போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ;
ஒரு வழி பாரு தினம் உன்னை நேரு

2. பூலோக வாழ்வதின் புகழென்ன? – பூ
வாடி உதிர்ந்தால் அதின் நிறமென்ன?
மாய உலகிலுனக்கென்ன? – ஜீவன்
வம்பில் விடுத்தால் அதன் பலமென்ன?
மாயை மறந்தோடு சுக இடம் தேடு

3. பலமுள்ள சிம்சோனைக் குறைவு செய்த – படு
பாதகி நீயே தாசி தெலீலாளே!
மன திழந்த மொழியைக் கேட்டாயே – கெட்ட
பெலிஸ்தர் கையிலவனைக் கொடுத்தாயே
படுபாதகியே, நரகவாசி நீயே

4. கழுதை எலும்பால் ஜெயங்கொண்டவனே – நீ
அழுது புலம்பி மாவரைப்பதென்ன?
பரகதி வாழ்வை நீ கெடுத்தாயே – பலர்
பரிகாசம் செய்ய உன்னைக் கொடுத்தாயே
மதி மறந்தவனே, துயரடைந்தவனே

மாயையில் மனம் ஓடவையாதே உன்னை – Maayaiyil Manam Udayavaiyathae Lyrics in English

1. maayaiyil manam odavaiyaathae – unnai
vittalathu konjam nillaathu;
paavaiyil kattina kayittaைp pol – akattup
pokak kaalam kitti varukuthaiyyo;
oru vali paaru thinam unnai naeru

2. pooloka vaalvathin pukalenna? – poo
vaati uthirnthaal athin niramenna?
maaya ulakilunakkenna? – jeevan
vampil viduththaal athan palamenna?
maayai maranthodu suka idam thaedu

3. palamulla simsonaik kuraivu seytha – padu
paathaki neeyae thaasi theleelaalae!
mana thilantha moliyaik kaettayae – ketta
pelisthar kaiyilavanaik koduththaayae
padupaathakiyae, narakavaasi neeyae

4. kaluthai elumpaal jeyangaொnndavanae – nee
aluthu pulampi maavaraippathenna?
parakathi vaalvai nee keduththaayae – palar
parikaasam seyya unnaik koduththaayae
mathi maranthavanae, thuyaratainthavanae

PowerPoint Presentation Slides for the song மாயையில் மனம் ஓடவையாதே உன்னை – Maayaiyil Manam Udayavaiyathae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாயையில் மனம் ஓடவையாதே உன்னை PPT
Maayaiyil Manam Udayavaiyathae PPT

உன்னை நீயே கொடுத்தாயே மாயையில் மனம் ஓடவையாதே விட்டாலது கொஞ்சம் நில்லாது பாவையில் கட்டின கயிற்றைப் அகற்றுப் போகக் காலம் கிட்டி வருகுதைய்யோ வழி பாரு English