பல்லவி
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார்,
வானெக்காளத் தொனி முழங்க.
அனுபல்லவி
எரி புகை மேக ரத மேறி
ஏசு மகா ராஜன் வருங்கால். – மரித்தோர்
சரணங்கள்
1. தூதர் மின் னாற்றிசை துலங்க,
ஜோதி வான் பறை இடி முழங்க,
பாதகர் நெஞ்சம் நடுநடுங்க,
பரிசுத் தோர் திரள் மனதிலங்க. – மரித்தோர்
2. வானம் புவியும் வையகமும்
மட மட வென்று நிலை பெயர,
ஆன பொருளெல்லாம் அகன் றோட,
அவரவர் தம் தம் வரிசையிலே. – மரித்தோர்
3. அழிவுள் ளோராய் விதைக்கப்பட்டோர்
அழியா மேனியை அணிந்திடுவார்;
எளிய ரூபமாய் விதைக்கப்பட்டோர்
என்றும் வாழும் ஜோதிகளாய். – மரித்தோர்
Marithor Uyirtheluvaar – மரித்தோர் உயிர்த்தெழுவார் Lyrics in English
pallavi
mariththor evarum uyirththeluvaar,
vaanekkaalath thoni mulanga.
anupallavi
eri pukai maeka ratha maeri
aesu makaa raajan varungaal. – mariththor
saranangal
1. thoothar min naattisai thulanga,
jothi vaan parai iti mulanga,
paathakar nenjam nadunadunga,
parisuth thor thiral manathilanga. – mariththor
2. vaanam puviyum vaiyakamum
mada mada ventu nilai peyara,
aana porulellaam akan roda,
avaravar tham tham varisaiyilae. – mariththor
3. alivul loraay vithaikkappattaோr
aliyaa maeniyai anninthiduvaar;
eliya roopamaay vithaikkappattaோr
entum vaalum jothikalaay. – mariththor
PowerPoint Presentation Slides for the song Marithor Uyirtheluvaar – மரித்தோர் உயிர்த்தெழுவார்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரித்தோர் உயிர்த்தெழுவார் PPT
Marithor Uyirtheluvaar PPT