Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் பலவீன தோஷியாம்

1.நான் பலவீன தோஷியாம்,
நீர் தயாமூர்த்தியே;
நின் பாதத் தூளும் மேலிடும்
நிர்ப்பந்த நீசனே.

2.எப்பாவம் வெட்கம் எட்டிடா
ஏகாந்த ஜோதியே,
எம் பாவம் நிந்தை தாங்கினீர்;
என் சொல்வேன் அன்பையே!

3.பிதாவின் மாட்சி ஆசனம்
அபாத்திர பாவிக்காய்
சுதா, நீர் நீத்து மாந்தர் தம்
சரீரம் எடுத்தீர்.

4.கை காலில் ஆணி பாய்ச்சுங்கால்
சகித்தீர் சாந்தமாய்;
ஐயா, எந்நாமம் சாற்ற உம்
பொறுமை தூய்மைக்கே!

5.அன்பே, நீர் மாந்தர் ஆகினீர்
என் அன்பைப் பெற்றிட;
நான் பாவி, தோஷி, வெட்கத்தால்
முன்னிற்கத் துணியேன்.

6.உம் தயை அன்பால் மட்டுமே
நான் பாத்திரன் ஆயினேன்;
உன் தாசர் காக்கும் வண்ணமே
காப்பீர் நீர் என்னையும்.

Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம் Lyrics in English

1.naan palaveena thoshiyaam, neer thayaamoorththiyae; nin paathath thoolum maelidum nirppantha neesanae. 2.eppaavam vetkam ettidaa aekaantha jothiyae, em paavam ninthai thaangineer; en solvaen anpaiyae! 3.pithaavin maatchi aasanam apaaththira paavikkaay suthaa, neer neeththu maanthar tham sareeram eduththeer. 4.kai kaalil aanni paaychchungaal sakiththeer saanthamaay; aiyaa, ennaamam saatta um poraுmai thooymaikkae! 5.anpae, neer maanthar aakineer en anpaip pettida; naan paavi, thoshi, vetkaththaal munnirkath thunniyaen. 6.um thayai anpaal mattumae naan paaththiran aayinaen; un thaasar kaakkum vannnamae kaappeer neer ennaiyum.

PowerPoint Presentation Slides for the song Naan Balaveena Thoshiyaam – நான் பலவீன தோஷியாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பலவீன தோஷியாம் PPT
Naan Balaveena Thoshiyaam PPT

நீர் மாந்தர் உம் பலவீன தோஷியாம் தயாமூர்த்தியே நின் பாதத் தூளும் மேலிடும் நிர்ப்பந்த நீசனே எப்பாவம் வெட்கம் எட்டிடா ஏகாந்த ஜோதியே எம் பாவம் English