Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீதியாமோ நீர் சொல்லும்

நீதியாமோ நீர் சொல்லும் ஓய்
நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில்

சரணங்கள்

ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை
ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ
பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் மோட்ச
பாதை நடக்கில் சிலாக்யம் – நீதி

தரித்திரக் கிரங்குவோன் உடனே இடுவான்
தற்பரனுக் கவன் கடனே என்று
கருத்துடன் கருதியில் திடனே உரைத்தார்
கடுநெஞ் சகல் மானிடனே – நீதி

அன்புடன் விதவையும் போட்ட காசை
அதி வியப்பாய் யேசு காட்டப் புகழ்
இன்புடன் அவள் மிசை சூட்ட அதை
எவர்களும் அகத்தினில் நாட்ட – நீதி

பிறர் புகழும்படி இன்றே செய்தால்
பிரயோசனமிலை என்றே பரன்
மறையதில் விளம்பினார் நன்றே அம்
மாதிரி விலகாது நின்றே – நீதி

பரிதானம் வாங்குதல் தீது – அதைப்
பறித்தறம் செய்தல் தகாது உமக்
குரியதில் ஈவேது போதம் இதில்
ஊன்றி இருப்பதே நீதம் – நீதி

ஏழைகட் கீயாது ஆஸ்தி ஐயே
ஈண்டு சேர்ந்திடில் என்ன கீர்த்தி இதோ
வாழுல கடைந்திடில் நேர்த்தி என்றும்
வாழலாம் அதுவே மா பூர்த்தி – நீதி

Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும் Lyrics in English

Neethiyaamo neer sollum oy neriyulorae aram seyyaathirunthitil saranangal aathulark geevathae paakkiyam pirarai aathariththiduvathae yokkiyam oko paathakam seyyil nirppaakkiyam motcha paathai nadakkil silaakyam – neethi thariththirak kiranguvon udanae iduvaan tharparanuk kavan kadanae entu karuththudan karuthiyil thidanae uraiththaar kadunenj sakal maanidanae – neethi anpudan vithavaiyum potta kaasai athi viyappaay yaesu kaattap pukal inpudan aval misai sootta athai evarkalum akaththinil naatta – neethi pirar pukalumpati inte seythaal pirayosanamilai ente paran maraiyathil vilampinaar nante am maathiri vilakaathu ninte – neethi parithaanam vaanguthal theethu – athaip pariththaram seythal thakaathu umak kuriyathil eevaethu potham ithil oonti iruppathae neetham – neethi aelaikat geeyaathu aasthi aiyae eenndu sernthitil enna geerththi itho vaalula katainthitil naerththi entum vaalalaam athuvae maa poorththi – neethi

PowerPoint Presentation Slides for the song Neethiyamo Neer Sollum – நீதியாமோ நீர் சொல்லும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீதியாமோ நீர் சொல்லும் PPT
Neethiyamo Neer Sollum PPT

நீதி நீதியாமோ நீர் சொல்லும் ஓய் நெறியுளோரே அறம் செய்யாதிருந்திடில் சரணங்கள் ஆதுலர்க் கீவதே பாக்கியம் பிறரை ஆதரித்திடுவதே யோக்கியம் ஓகோ பாதகம் செய்யில் நிர்ப்பாக்கியம் English