பல்லவி
நேசபரனைத் துதிப்பாய், ஓ நெஞ்சமே!
அனுபல்லவி
தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த
மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர – நேச
சரணங்கள்
1. மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்;
வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார்,
சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்;
சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். – நேச
2. பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்?
பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்?
தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம்,
செப்புவேன் இங்குமங்கும் எனியனின் தோத்திரம். – நேச
3. அடியனுக்கவர் செய்த அன்புரைத்தாமோ?
ஆயிரம் நாவினால் சொல்வது போமோ?
இடிதனைத் தாங்கிட மனிதரா லாமோ?
இயேசெனைத் தாங்கையில் என்னுயிர் போமோ? – நேச
4. உள்ளும் புறம்புமான எந்த வில்லங்கம்
உலகிலெனக்கு வரும்? எவ்விதப் பங்கம்
தள்ளியே காத்திடும் தகும் யூதா சிங்கம்,
தாரணியினில் தனக்கிணையிலாத் தங்கம். – நேச
Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே Lyrics in English
Pallavi
Naesaparanaith thuthippaay, o nenjamae!
Anupallavi
Thaasan puviyoril maa neesanennaippitiththa
Mosam nivirththi seytha yaesukrupaasamuthra – naesa
Saranangal
1. Maranam pitiththumennai vallavan viduththaar;
Valiya paathaalam ninte makimaiyaa yeduththaar,
Saranamente puthu uyirthanaik koduththaar;
Sathru enakkuch setham puriyaathu thaduththaar. – naesa
2. Paathaka nenakkunntoo konjamum paaththiram?
Paranarul nanmaik kippaavi emmaaththiram?
Theethan rusiththa nalam anpu maa kaaththiram,
Seppuvaen ingumangum eniyanin thoththiram. – naesa
3. Atiyanukkavar seytha anpuraiththaamo?
Aayiram naavinaal solvathu pomo?
Itithanaith thaangida manitharaa laamo?
Iyaesenaith thaangaiyil ennuyir pomo? – naesa
4. Ullum purampumaana entha villangam
Ulakilenakku varum? Evvithap pangam
Thalliyae kaaththidum thakum yoothaa singam,
Thaaranniyinil thanakkinnaiyilaath thangam. – naesa
PowerPoint Presentation Slides for the song Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே PPT
Nesa Paranai Thuthippai PPT

