Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நித்தியானந்தத்தை நாடு

பல்லவி

நித்தியானந்தத்தை நாடு – பர
நிர்மல சுகந்தேடு மனமே

அனுபல்லவி

சத்திய மார்க்கந்தனிலே கூடு
சற்சன சங்கத்தினோடுறவாடு

1. இந்திர ஜாலம் உலக வைபோகம்
இன்றைக்கிருப்பதுவோ – சந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியும் இத்தேகம்
ஐயோ! அதனுடனுனக்கென்ன சிநேகம் – நித்

2. தன தானிய முதலான சம்பத்து
சாஸ்வதமோ? அதற்காயிரந் தத்து
தினமும் கவலைகள் விளைத்திடும் வித்து
சீச்சீ அதனை விரும்பல் விபத்து – நித்

3. மெய்யே ஒன்றுக்கு முதவாத பாண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசப் பிண்டம்
மெய்யே இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியன் பாதமுனக் காயிரம் தண்டம் – நித்

4. காண்பதெல்லாம் நிலை அல்ல அநித்யம்
காய மிறந்திட வேண்டு மகத்தியம்
வீண் பொருள் மீதுனக் கென்ன பைத்தியம்?
வேதாகமமே சொல்வது சத்தியம் – நித்

Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு Lyrics in English

pallavi

niththiyaananthaththai naadu – para
nirmala sukanthaedu manamae

anupallavi

saththiya maarkkanthanilae koodu
sarsana sangaththinoduravaadu

1. inthira jaalam ulaka vaipokam
intaikkiruppathuvo – santhaekam
anthara minnalpol aliyum iththaekam
aiyo! athanudanunakkenna sinaekam – nith

2. thana thaaniya muthalaana sampaththu
saasvathamo? atharkaayiran thaththu
thinamum kavalaikal vilaiththidum viththu
seechchaீ athanai virumpal vipaththu – nith

3. meyyae ontukku muthavaatha paanndam
mirukaathikal sool maamisap pinndam
meyyae itharkingu niththiya kanndam
punnnniyan paathamunak kaayiram thanndam – nith

4. kaannpathellaam nilai alla anithyam
kaaya miranthida vaenndu makaththiyam
veenn porul meethunak kenna paiththiyam?
vaethaakamamae solvathu saththiyam – nith

PowerPoint Presentation Slides for the song Nithiyaananthai Naadu – நித்தியானந்தத்தை நாடு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்தியானந்தத்தை நாடு PPT
Nithiyaananthai Naadu PPT

நித் மெய்யே பல்லவி நித்தியானந்தத்தை நாடு பர நிர்மல சுகந்தேடு மனமே அனுபல்லவி சத்திய மார்க்கந்தனிலே கூடு சற்சன சங்கத்தினோடுறவாடு இந்திர ஜாலம் உலக வைபோகம் English