Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவி மயக்கங் கொண்டிராதே

பல்லவி

பாவி! மயக்கங் கொண்டிராதே
பல மாயையினாலே

சரணங்கள்

1. தினமும் பரனடி மகிழ்ந்து நீ போற்று;
சித்தப்படி யலையும் மனதையே மாற்று;
சினமுள்ள கோபத்தை நெறியுடன் ஆற்று
சேதமில்லாத வழி அறிந்து நீ சொல்லு – பாவி

2. சத்திய வழியினிற் சார்பதாய் நில்லு
சர்ப்பனை இன்னதென்று திடம் பண்ணிக் கொள்ளு
புத்திமதிகளைப் பிறருக்குச் சொல்லு
பேயின் மா தந்திரத்தை அறிந்து நீ வெல்லு – பாவி

3. உலகத்தின் வாழ்வுகள் நெடுநாள் நில்லாதே
உண்மை தவறினவனிடத்தில் செல்லாதே
எவரையும் தந்திரத்தால் மோசம் பண்ணாதே
இரட்சகர் புத்திதனை இகழ்ந்து தள்ளாதே – பாவி

4. மூடனுக்கறிவுதான் உரைத்தால் வெல்லாதே
மூர்க்கன் வெறியனென்று பேரெடுக்காதே
தேடாத் திரவியத்தைத் திருடிக்கொள்ளாதே
தேவனுரை மறந்தால் சிட்சை பொல்லாதே – பாவி

Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே Lyrics in English

pallavi

paavi! mayakkang konntiraathae
pala maayaiyinaalae

saranangal

1. thinamum paranati makilnthu nee pottu;
siththappati yalaiyum manathaiyae maattu;
sinamulla kopaththai neriyudan aattu
sethamillaatha vali arinthu nee sollu – paavi

2. saththiya valiyinir saarpathaay nillu
sarppanai innathentu thidam pannnnik kollu
puththimathikalaip pirarukkuch sollu
paeyin maa thanthiraththai arinthu nee vellu – paavi

3. ulakaththin vaalvukal nedunaal nillaathae
unnmai thavarinavanidaththil sellaathae
evaraiyum thanthiraththaal mosam pannnnaathae
iratchakar puththithanai ikalnthu thallaathae – paavi

4. moodanukkarivuthaan uraiththaal vellaathae
moorkkan veriyanentu paeredukkaathae
thaedaath thiraviyaththaith thirutikkollaathae
thaevanurai maranthaal sitchaை pollaathae – paavi

PowerPoint Presentation Slides for the song Paavi Mayakkan Kondirathae- பாவி மயக்கங் கொண்டிராதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவி மயக்கங் கொண்டிராதே PPT
Paavi Mayakkan Kondirathae PPT

பாவி அறிந்து சொல்லு பல்லவி மயக்கங் கொண்டிராதே மாயையினாலே சரணங்கள் தினமும் பரனடி மகிழ்ந்து போற்று சித்தப்படி யலையும் மனதையே மாற்று சினமுள்ள கோபத்தை நெறியுடன் English