Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாவி பரமசுதன் தாவி

பல்லவி

பாவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி
அழைக்கிறார் இதோ வாராயோ – ஓ

அனுபல்லவி

பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து தீர்த்த
தேவாட்டுக்குட்டி இதோ பார் பார் பார் – ஓ பாவி

1. ஜென்மபாவத்தினோடு கன்மபாவமு முன்னை
சின்னப்படுத்திதைப் பார் பார் பார் – உனின்
நன்மை ஏதுமில்லாத தன்மை அதை அறிந்து
நன் மணவாளனேசுவைச் சேர் சேர் சேர் – ஓ பாவி

2. சிற்றொளி தீபம் சுற்றிப்பறந்து நிற்கும்
சிற்றுயிர் புட்கள் தனைப்போலவே – உனைச்
சுற்றி உலகளிக்கும் சிற்றின்பமான சுகம்
தொற்றிப் பாவி நீ கெட்டாய் சாலவே – ஓ பாவி

3. எத்தனை தானதர்மம் நித்தம் பூசைபலிகள்
அத்தனையாலும் பாவம் தீராதே – பரி
சுத்தன் ஏசுவின் திருரத்தம் பாவக்கறையை
சுத்திகரித்திடும் நீ சேராயோ – ஓ பாவி

4. தந்தைப் பிதா தமது சொந்தக் குமாரன் தனை
தந்து உலகினை புரந்தாரே – நீயும்
சொந்த சேயனாகவே உந்தன் விசுவாசத்தால்
சொந்தம் உண்டாகுமென்று பகர்ந்தாரே – ஓ பாவி

5. நீடிய பாவமன்னிப்போடுமே பரிசுத்தம்
நித்திய ஜீவனுமுன் பங்காமே – இன்பம்
நாடி ஜீவகிரீடம் சூடிப் பராபரனைப்
பாடி மகிழ்வதுமுன் பங்காமே – ஓ பாவி

பாவி பரமசுதன் தாவி -Paavi Parama Suthan Thaavi Lyrics in English

Pallavi paavi paramasuthan thaaviunaith thayavaay koovi alaikkiraar itho vaaraayo – o anupallavi poovin paavap paaraththai maevich sumanthu theerththa thaevaattukkutti itho paar paar paar – o paavi 1. Jenmapaavaththinodu kanmapaavamu munnai sinnappaduththithaip paar paar paar – unin nanmai aethumillaatha thanmai athai arinthu nan manavaalanaesuvaich ser ser ser – o paavi 2. Sittaொli theepam suttipparanthu nirkum sittaுyir putkal thanaippolavae – unaich sutti ulakalikkum sittinpamaana sukam thottip paavi nee kettay saalavae – o paavi 3. Eththanai thaanatharmam niththam poosaipalikal aththanaiyaalum paavam theeraathae – pari suththan aesuvin thiruraththam paavakkaraiyai suththikariththidum nee seraayo – o paavi 4. Thanthaip pithaa thamathu sonthak kumaaran thanai thanthu ulakinai puranthaarae – neeyum sontha seyanaakavae unthan visuvaasaththaal sontham unndaakumentu pakarnthaarae – o paavi 5. Neetiya paavamannippodumae Parisuththam niththiya jeevanumun pangaamae – inpam naati jeevakireedam sootip paraaparanaip paati makilvathumun pangaamae – o paavi

PowerPoint Presentation Slides for the song பாவி பரமசுதன் தாவி -Paavi Parama Suthan Thaavi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாவி பரமசுதன் தாவி PPT
Paavi Parama Suthan Thaavi PPT

பாவி பார் சேர் இதோ பங்காமே பல்லவி பரமசுதன் தாவிஉனைத் தயவாய் கூவி அழைக்கிறார் வாராயோ அனுபல்லவி பூவின் பாவப் பாரத்தை மேவிச் சுமந்து English