Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்

1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
பக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம்

2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம்

3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,
ஆன பழங் கந்தை என்ன பாடோ? — பெத்லேகம்

4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,
இன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம்

5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்

Pethlaekam Oororam Lyrics in English

1. Pethlaekam oororam saththiraththai naatik karththan Yesu paalanukkuth thuththiyangal paatip pakthiyudan iththinam vaaotip — pethlaekam 2. Ellaiyillaa njaanaparan vellaimalaiyoram pullannaiyilae piranthaar illamengum eeram thollaimikum avviruttu naeram — pethlaekam 3. Vaan puvi vaal raajanukku maattakanthaan veetoo, vaanavarkku vaayththa meththai vaatina pul pootoo, aana palang kanthai enna paatoo? — pethlaekam 4. Antharaththil paadukintar thoothar senai kooti manthai aayar odukintar paadal kaetkath thaeti, intiravil enna intha moti — pethlaekam 5. Aattitaiyar anjukiraar avar makimai kanndu, attiyintik kaapiriyael sonna seythi keாnndu, naattamudan ratchakaraik kanndu — pethlaekam

PowerPoint Presentation Slides for the song Pethlaekam Oororam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக் PPT
Pethlaekam Oororam PPT

பெத்லேகம் கண்டு ஊரோரம் சத்திரத்தை நாடிக் கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப் பக்தியுடன் இத்தினம் வாஓடிப் எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம் புல்லணையிலே பிறந்தார் English