Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

பல்லவி

பொக்கிஷம் சேர்த்திடுங்கள்-பரத்திலே

அனுபல்லவி

பக்கிஷமாகப் பரத்திலே பொக்கிஷம்
மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம். – பொக்

சரணங்கள்

1. பொட்டும் அரிக்காதே,-அங்கே புழுப்
பூச்சி கெடுக்காதே;
துட்டரங்கே கன்னமிட்டுத் திருடாரே;
துருவும் பிடியாது, குறையாது, அழியாது. – பொக்

2. விண்ணுலகந் தன்னிலே-பொக்கிஷத்தை
விரும்பியே சேர்த்திடுவோர்
மண்ணிலும் விண்ணிலும் வாழ்வது திண்ணமே;
மாயப் ப்ரபஞ்சத்தின் வாழ்வெல்லாங் குப்பையே – பொக்

3. உங்கள் பொக்கிஷம் எங்கேயோ,-அங்கே உங்கள்
உள்ளமுமே யிருக்கும்,
இங்கித மோட்சத்தை என்றும் நினைக்கவே,
என்றும் வைக்கப்பாரும் உங்கள் பொக்கிஷத்தை. – பொக்

4. ஜீவன் சுகத்துடனே-இருக்கையில்
ஆவலா யிப்பொழுதே,
தேவலோகத்திலே ஜீவ பொக்கிஷத்தைச்
சேர்த்திடுவோர் மெத்தப் பாக்கியவான்களே. – பொக்

Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள் Lyrics in English

Pallavi pokkisham serththidungal-paraththilae anupallavi pakkishamaakap paraththilae pokkisham mikkavae serppathu maelaana paakkiyam. – pok saranangal 1. Pottum arikkaathae,-angae pulup poochchi kedukkaathae; thuttarangae kannamittuth thirudaarae; thuruvum pitiyaathu, kuraiyaathu, aliyaathu. – pok 2. Vinnnulakan thannilae-pokkishaththai virumpiyae serththiduvor mannnnilum vinnnnilum vaalvathu thinnnamae; maayap prapanjaththin vaalvellaang kuppaiyae – pok 3. Ungal pokkisham engaeyo,-angae ungal ullamumae yirukkum, ingitha motchaththai entum ninaikkavae, entum vaikkappaarum ungal pokkishaththai. – pok 4. Jeevan sukaththudanae-irukkaiyil aavalaa yippoluthae, thaevalokaththilae jeeva pokkishaththaich serththiduvor meththap paakkiyavaankalae. – pok

PowerPoint Presentation Slides for the song Pokkisam Serthidungal – பொக்கிஷம் சேர்த்திடுங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பொக்கிஷம் சேர்த்திடுங்கள் PPT
Pokkisam Serthidungal PPT

பொக் பொக்கிஷம் உங்கள் சேர்த்திடுவோர் பல்லவி சேர்த்திடுங்கள்பரத்திலே அனுபல்லவி பக்கிஷமாகப் பரத்திலே மிக்கவே சேர்ப்பது மேலான பாக்கியம் சரணங்கள் பொட்டும் அரிக்காதேஅங்கே புழுப் பூச்சி கெடுக்காதே English