சீயோன் 1
பொற்பு மிகும் வானுலகும்
பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கே
பொந்திப்பிலாத் தரண்மனையில்
வந்து நிற்கும் காரணமேன், கோவே?
கிறிஸ்து
கற்பனை மீறிய பவத்தால்
கடின நரகாக்கினைப் படாமல் உன்னைக்
காப்பதற் கிங்கே ஞாய
தீர்ப்பில் உற்றோம் சீயோனின் மாதே – பொற்பு
சீயோன் 2
துய்ய திரு மேனி எல்லாம்
நொய்ய உழுத நிலம்போல ஆகி கன
சோரி சிந்த வாரதினால்
நீர் அடிக்கப்பட்டதென்ன கோவே? – பொற்பு
கிறிஸ்து
வையகத்தின் பாதகத்தால்
பெய்யும் நடுதீர்வையெல்லாம் ஆற்ற இந்த
வாதை எல்லாம் பட்டிறக்க
போத மனம் சம்மதித்தோம் மாதே – பொற்பு
சீயோன் 3.
செய்ய கண்கள் உறச் சிவந்து
திருக் கன்னங்கள் தடித்து மிக வீங்கி முழுச்
சென்னியின் ரோமங்கள் எல்லாம்
வின்னமுற்றிங் கிருப்பதென்ன கோவே? – பொற்பு
கிறிஸ்து
மையிருளில் குருக்களுடை
மாளிகையில் படித்தின பாடெல்லாம் இங்கே
வன் கொலைஞரால் அடிக்க
பங்கமுற்ற கோலம் இது மாதே – பொற்பு
Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும் Lyrics in English
Seeyon 1
Porpu mikum vaanulakum
Poovulakum pataiththa parapporulae, ingae
Ponthippilaath tharannmanaiyil
Vanthu nirkum kaaranamaen, kovae?
Kristhu
Karpanai meeriya pavaththaal
Katina narakaakkinaip padaamal unnaik
Kaappathar kingae njaaya
Theerppil uttaோm seeyonin maathae – porpu
Seeyon 2
Thuyya thiru maeni ellaam
Noyya ulutha nilampola aaki kana
Sori sintha vaarathinaal
Neer atikkappattathenna kovae? – porpu
Kristhu
Vaiyakaththin paathakaththaal
Peyyum nadutheervaiyellaam aatta intha
Vaathai ellaam pattirakka
Potha manam sammathiththom maathae – porpu
Seeyon 3.
Seyya kannkal urach sivanthu
Thiruk kannangal thatiththu mika veengi muluch
Senniyin romangal ellaam
Vinnamutting kiruppathenna kovae? – porpu
Kristhu
Maiyirulil kurukkalutai
Maalikaiyil patiththina paadellaam ingae
Van kolainjaraal atikka
Pangamutta kolam ithu maathae – porpu
PowerPoint Presentation Slides for the song Porpu Migum Vaanulagam – பொற்பு மிகும் வானுலகும்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download பொற்பு மிகும் வானுலகும் PPT
Porpu Migum Vaanulagam PPT

