Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

1. சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
2. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
3. கர்த்தர் கரத்தின் கிரியைகள் நாங்கள்
கிருபை எங்கள்மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
சாத்தான் தொடாமல் காப்பீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
4. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இருதயத்தை படைக்கின்றோமே
ஏங்குகின்றோம் உம் ஆசீர் பெறவே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
5. சபையின் அஸ்திபாரமும் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து பாதுகாத்தென்றுமே
சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
6. சாத்தான் என்னை எதிர்த்த போதும்
ஜெய கிறிஸ்து என்னோடே உண்டே
தோல்வி என்றும் எனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வேன்
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்
7. எந்தன் மீட்பரும் ஜீவனும் நீரே
என்னைக் காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே
ஆஹாஹா அல்லேலூயா  – 8  ஆமென்

Sarva Sristikkum Yejamaanan Neere Lyrics in English

1. Sarva sirushtikkum ejamaanan neerae
Sarva sirushtiyaik kaappavar neerae
Engal ithayaththil ummai pottaுkirom
Ententum panninthu tholuvom
Aahaahaa Alleluya  – 8  Amen
2. Vaanam poomi olinthu ponaalum
Um vaarththaikal entum maaraathae
Ulakam alinthu marainthu pom
Visuvaasi ententum nilaippaan
Aahaahaa Alleluya  – 8  Amen
3. Karththar karaththin kiriyaikal naangal
Kirupai engalmael oottaுveerae
Aavi aathmaa sareeram um sonthamae
Saaththaan thodaamal kaappeerae
Aahaahaa Alleluya  – 8  Amen
4. Ellaa manitharkkum aanndavar neerae
Aaseervaathaththirkum ootte
Engal iruthayaththai pataikkintomae
Aengukintom um aaseer peravae
Aahaahaa Alleluya  – 8  Amen
5. Sabaiyin asthipaaramum neerae
Sabaiyin thalaiyaanavar neerae
Sabaiyai poshiththu paathukaaththentumae
Serththuk kolla varupavar neerae
Aahaahaa Alleluya  – 8  Amen
6. Saaththaan ennai ethirththa pothum
Jeya Kristhu ennotae unntae
Tholvi entum enakkillaiyae
Thuthikaanam thoniththu makilvaen
Aahaahaa Alleluya  – 8  Amen
7. Enthan meetparum jeevanum neerae
Ennaik kaakkum karththarum neerae
Ennai umakku entum arppanniththaen
En vaalvil jothiyum neerae
Aahaahaa Alleluya  – 8  Amen

PowerPoint Presentation Slides for the song Sarva Sristikkum Yejamaanan Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே PPT
Sarva Sristikkum Yejamaanan Neere PPT

ஆஹாஹா அல்லேலூயா ஆமென் உம் நீரே சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரேசர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரேஎங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்என்றென்றும் பணிந்து தொழுவோம் வானம் English