சத்திய வேதத்தைத் தினம் தியானி
பல்லவி
சத்திய வேதத்தைத் தினம் தியானி,
சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழி காட்டும், உயர்வானுலகில் உனைக்கூட்டும் – சத்திய
சரணங்கள்
1. வாலிபர் தமக்கூண் அதுவாகும்; வயோதியர்க்கும் அதுண வாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்; படிமீ தாத்மபசி தணிக்கும். – சத்திய
2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் தருணம் அது நல் ஆயுதமாம்;
புத்திரர் மித்திரரோடு மகிழும் பொழுதும் அதுநல் உறவாகும். – சத்திய
3. புலைமேவிய மானிட ரிதயம் புனிதம் பெறுதற்கதுமருந்தாம்;
நிலையா நரர்வாணாள் நிலைக்க நேயகாய கற்பம் அதாம் – சத்திய
4. கதியின் வழிகாணாதவர்கள் கண்ணுக்கரிய கலிக்கம் அது;
புதிய எருசாலேம்பதிக்குப் போகும் பயணத்துணையும் அது. – சத்திய
5. மாந்தர் ரக்ஷிப்படையும் வழி வழுத்தும் வேதவார்த்தை அது;
வேந்தர் அமைச்சர் முதலெவர்க்கும் விதித்த பிரமாணமும் அதுவே. – சத்திய
Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம் Lyrics in English
Saththiya vaethaththaith thinam thiyaani
Pallavi
Saththiya vaethaththaith thinam thiyaani,
Sakala paerkkum athapimaani.
Anupallavi
Uththamajeeviya vali kaattum, uyarvaanulakil unaikkoottum – saththiya
Saranangal
1. Vaalipar thamakkoonn athuvaakum; vayothiyarkkum athuna vaakum
Paalakarkkiniya paalum athaam; patimee thaathmapasi thannikkum. – saththiya
2. Saththurup paeyudan amarpuriyum tharunam athu nal aayuthamaam;
Puththirar miththirarodu makilum poluthum athunal uravaakum. – saththiya
3. Pulaimaeviya maanida rithayam punitham peraுtharkathumarunthaam;
Nilaiyaa nararvaannaal nilaikka naeyakaaya karpam athaam – saththiya
4. Kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu;
Puthiya erusaalaempathikkup pokum payanaththunnaiyum athu. – saththiya
5. Maanthar rakshippataiyum vali valuththum vaethavaarththai athu;
Vaenthar amaichchar muthalevarkkum vithiththa piramaanamum athuvae. – saththiya
PowerPoint Presentation Slides for the song Saththiya Vedhathai Dhinam – சத்திய வேதத்தைத் தினம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சத்திய வேதத்தைத் தினம் PPT
Saththiya Vedhathai Dhinam PPT

