1. சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றுவேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்;
உற்றார், மேன்மை, ஆஸ்தி, கல்வி,
ஞானம், லோகம் அனைத்தும்
அற்பக் குப்பை என்று எண்ணி,
வெறுப்பேனே முற்றிலும்.
2. உமக்காகப் பாடுபட்டோன்
நஷ்டப்படமாட்டானே;
உமக்கென்று ஜீவன் விட்டோன்
சாகா ஜீவன் பெற்றானே
உம்மை வெல்ல மீட்பர் என்று
சொல்லி, நித்தம் பற்றுவேன்;
கஸ்திப்பட்டும் சாவை வென்று,
வாடா கிரீடம் பெறுவேன்.
3. துஷ்டர் என்னைப் பகைத்தாலும்,
நீரே தஞ்சம் ஆகுவீர்;
கஸ்தி என்ன நேரிட்டாலும்,
இனி மேன்மை தருவீர்;
உமதன்பு என்னைத் தேற்ற,
துக்கம், பயமில்லையே
நாதா, உம் பிரசன்னம் நீங்க
இன்பமெல்லாம் துன்பமே.
4. நெஞ்சமே, உன் மேன்மை எண்ணு,
வரும் செல்வம் நோக்கிப்பார்
மோட்ச நன்மை தேடிக்கொள்ளு,
உன் சுதந்தரத்தைக் கா;
கொஞ்ச வேளைக்குள் பறந்து
இயேசு அண்டை சேருவாய்;
தெய்வ தூதரோடு நின்று
என்றென்றைக்கும் துதிப்பாய்.
Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக Lyrics in English
1. Siluvai sumanthonaaka Yesu ummaip pattaுvaen aelaip parathaesiyaaka motcha veedu naaduvaen; uttaாr, maenmai, aasthi, kalvi, njaanam, lokam anaiththum arpak kuppai entu ennnni, veraுppaenae muttilum. 2. Umakkaakap paadupattaோn nashdappadamaattanae; umakkentu jeevan vittaோn saakaa jeevan pettaாnae ummai vella meetpar entu solli, niththam pattaுvaen; kasthippattum saavai ventu, vaadaa kireedam peraுvaen. 3. Thushdar ennaip pakaiththaalum, neerae thanjam aakuveer; kasthi enna naerittalum, ini maenmai tharuveer; umathanpu ennaith thaetta, thukkam, payamillaiyae naathaa, um pirasannam neenga inpamellaam thunpamae. 4. Nenjamae, un maenmai ennnu, varum selvam Nnokkippaar motcha nanmai thaetikkollu, un suthantharaththaik kaa; konja vaelaikkul paranthu Yesu anntai seruvaay; theyva thootharodu nintu ententaikkum thuthippaay.
PowerPoint Presentation Slides for the song Siluvai Sumanthonaaga – சிலுவை சுமந்தோனாக
by clicking the fullscreen button in the Top left.
Or you can download சிலுவை சுமந்தோனாக PPT
Siluvai Sumanthonaaga PPT

