Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

பல்லவி

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே!
துதிமிகு தேவா ஸ்தோத்திரமே!

அனுபல்லவி

நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை
காத்தீர் கருணையால் நிதம் உண்மை! – ஸ்தோத்

சரணங்கள்

1. எத்தனை ஆபத்து சோதனைகள்
எமக்கு நேரிட்ட பல இடர்கள்
அத்தனையும் எமை அணுகாமல்
ஆதரித்தீர் பிழை நினையாமல்! – ஸ்தோத்

2. ஆனந்தத்துடன் புது வருடம்
ஆரம்பித்தோம் ஆவலுடன்
நானிலம் புரக்க அவதரித்த
நாதனைப் புகழ்வோம் நன்றியுடன் – ஸ்தோத்

3. இப்புது ஆண்டினில் அடியார்க்கு
இகபர நன்மைகள் அனுக்கிரகித்து;
அப்பனே கிருபையின் செட்டையினுள்
அற்புதமா யணைத் தாதரிப்பாய் – ஸ்தோத்

4. வெற்றியாய் யுத்தத்தில் முன்செல்ல
வெகுவாய் ஆத்ம ஜெயங்கள் கொள்ள;
பற்றியே நடந்துனின் பாதை செல்ல
பகருவாய் உன்னத வரங்கள் செல்ல – ஸ்தோத்

5. தேசங்கள் வாழியே தீமையற
தேவனைத் தேடியே தோஷமற,
ஓசன்னா பாடவே ஓகையுற
உய்யவே அருள்வாய் ஊழியற – ஸ்தோத்

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae Lyrics in English

pallavi

sthoththiram sthoththiram sthoththiramae!
thuthimiku thaevaa sthoththiramae!

anupallavi

naeththirampol kadanthaanntilemai
kaaththeer karunnaiyaal nitham unnmai! – sthoth

saranangal

1. eththanai aapaththu sothanaikal
emakku naeritta pala idarkal
aththanaiyum emai anukaamal
aathariththeer pilai ninaiyaamal! – sthoth

2. aananthaththudan puthu varudam
aarampiththom aavaludan
naanilam purakka avathariththa
naathanaip pukalvom nantiyudan – sthoth

3. ipputhu aanntinil atiyaarkku
ikapara nanmaikal anukkirakiththu;
appanae kirupaiyin settaைyinul
arputhamaa yannaith thaatharippaay – sthoth

4. vettiyaay yuththaththil munsella
vekuvaay aathma jeyangal kolla;
pattiyae nadanthunin paathai sella
pakaruvaay unnatha varangal sella – sthoth

5. thaesangal vaaliyae theemaiyara
thaevanaith thaetiyae thoshamara,
osannaa paadavae okaiyura
uyyavae arulvaay ooliyara – sthoth

PowerPoint Presentation Slides for the song ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே – Sthothiram Sthothiram Sthothiramae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே PPT
Sthothiram Sthothiram Sthothiramae PPT

ஸ்தோத் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே செல்ல பல்லவி துதிமிகு தேவா அனுபல்லவி நேத்திரம்போல் கடந்தாண்டிலெமை காத்தீர் கருணையால் நிதம் உண்மை சரணங்கள் எத்தனை ஆபத்து சோதனைகள் எமக்கு English