Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

பல்லவி

தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்
வேகத்துடனே வாரேன்.

அனுபல்லவி

சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே

சரணங்கள்

1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
சிலுவைதனிலே பகுத்தீர்;
மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,
சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அது
பேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்
பேருல குதித்தேனென்றீர்;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்
மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம். – தாரகமே

3. தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
தகமை எத்தனமாமே;-யான்
சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
தேவசுத்தாவி தாமே;
உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே! – தாரகமே

Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Lyrics in English

Pallavi thaarakamae,-pasithaakaththudan ummidam vaekaththudanae vaaraen. Anupallavi seerunj selvamum pettaுth thaeraுmpatik kennidam serum yaaraiyum orupothun thallitae nenteer. – thaarakamae saranangal 1. Paavamakalath thaeva kopamathu oliyap paadupattuyir viduththeer;-pinnum jeeva posana menakgeeya umaiyae anthach siluvaithanilae pakuththeer; maeviyenai nerukkith thaavum pavaththaik kontu, sevith thuyirpilaikka, thaevae, umaiyut kolla. – thaarakamae 2. Kaannaatholintha aadu veennaayp pokaamal athai kanndupitiththi ratchiththeer;-athu paenuthaludan pari poorana matainthidap paerula kuthiththaenenteer; vaenumumathu neethi poona, niraivaa yuntan maanarulun thirupthiyaanae pera ummidam. – thaarakamae 3. Thantha thiruvasanam untham iraapposanam thakamai eththanamaamae;-yaan sinthai panninthavattaை entan manathutkollath thaevasuththaavi thaamae; untham thasaiyuthira vinthai virunthinai yaan santhathamunndu thuthi saatta arul seyveerae! – thaarakamae

PowerPoint Presentation Slides for the song Thaaragamae Pasithakathudan Ummmidam – தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் PPT
Thaaragamae Pasithakathudan Ummmidam PPT

தாரகமே உம்மிடம் உந்தம் பல்லவி தாரகமேபசிதாகத்துடன் வேகத்துடனே வாரேன் அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம் சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர் சரணங்கள் English