🏠  Lyrics  Chords  Bible 

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல PPT

Thai Madiyil
தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல
தகப்பனே உம்மடியில் சாய்ந்துவிட்டேன் நான்
1. கவலையில்லையே கலக்கமில்லையே
கர்த்தர் கரம்பிடித்துக் கொண்டேன்
எதைக் குறித்தும் பயமில்லையே
என் நேசர் நடத்துகிறீர்
2. செய்த நன்மைகள் நினக்கின்றேன்
நன்றியோடு துதிக்கிறேன் – நான்
கைவிடாத என் ஆயனே
கல்வாரி நாயகனே
3. துணையாளரே துணையாளரே
இணையில்லா மணவாளரே – என்
உணவாக வந்தீரையா
உயிரோடு கலந்தீரையா -என்
4. உம்மைத்தானே பற்றிக்கொண்டேன்
உம்தோளில் அமர்ந்துவிட்டேன்-நான்
உந்தன் சிறகுகள் நிழல்தனிலே
உலகத்தையே மறந்துவிட்டேன் – இந்த
5. அதிகாலமே தேடுகிறேன் ஆர்வமுடன் நாடுகிறேன
உயிர்வாழும் நாட்களெல்லாம்
உம் நாமம் சொல்வேனையா – நான்
6. அதிசயமே அதிசயமே ஆறுதல் நாயகனே – என்
ஆலோசனைக் கர்த்தரே – என்
அடைக்கலப் பட்டணமே


Thai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற PowerPoint



தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல

தாய்மடியில் தவழுகின்ற குழந்தையைப் போல PPT

Download Thai Madiyil – தாய்மடியில் தவழுகின்ற Tamil PPT