பல்லவி
தருணம் இதில் யேசுபரனே!-உமதாவி
தரவேணும் சுவாமீ!
அனுபல்லவி
அருள்தரும் சத்ய வல்ல, அன்பின் ஜெபத்தின் ஆவி
அபிஷேகம் பெறுமுன்றன் அடியர்மேல் அமர்ந்திட. – தருணம்
சரணங்கள்
1. விந்தை ஞானம் அறிவு வேத சத்தியங்களில்
மிக்க உயர்ந்து தேர்ந்து விண்ணொளி இவர் வீசச்,
சத்யம் சகலத் துள்ளும் தாசர்களை நடத்தும்
சத்ய ஆவி இவர்மேல் சம்பூரணமாய்ப் பெய்ய. – தருணம்
2. பாவத்தை வேரறுக்கும் ஆவியின் வாள்பிடித்துப்
பலமாகவே இவர் உலகினில் போர் செய்யச்,
சாவுற்றோர்களை நித்ய ஜீவனைப் பெறச் செய்யும்
மா வீரராய் விளங்க வல்லாவியே இறங்க. – தருணம்
3. ஆவியின் கனியென்னும் அன்பாதி குணங்களை
அனுதினமும் இவர் அணிகல மாயணிந்து,
மேவும் திருமந்தையை மேய்த்து வளர்க்க நல்ல
மேய்ப்பரே, அன்பின் ஆவி வாய்ப்பாய் இவரில் தங்க. – தருணம்
4. ஏக்கம் ஆத்தும தாகம் இடைவிடாமல் அடைந்து
ஊக்கத்துடனே இவர் ஓயாமல் ஜெபித்திட,
வாக்குக் கடங்காப் பெருமூச்சோடே எமக்காக
மன்றாடும் ஜெப ஆவி என்றென்றும் நிரம்பிட. – தருணம்
5. மாசுகளற உம்மில் வாசமாக நிலைத்து
மாபணிவாய் உந்தம் மகிமையை நிதம் தேடத்,
தேசுறு அருள்நாதா, தாசர் உள்ளத்தினின்று
ஜீவநதிகள் ஓடிச் செல்வம் பொழியச் செய்ய. – தருணம்
Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே Lyrics in English
Pallavi
Tharunam ithil yaesuparanae!-umathaavi
Tharavaenum suvaamee!
Anupallavi
Arultharum sathya valla, anpin jepaththin aavi
Apishaekam peraுmuntan atiyarmael amarnthida. – tharunam
Saranangal
1. Vinthai njaanam arivu vaetha saththiyangalil
Mikka uyarnthu thaernthu vinnnnoli ivar veesach,
Sathyam sakalath thullum thaasarkalai nadaththum
Sathya aavi ivarmael sampooranamaayp peyya. – tharunam
2. Paavaththai vaeraraுkkum aaviyin vaalpitiththup
Palamaakavae ivar ulakinil por seyyach,
Saavuttaோrkalai nithya jeevanaip perach seyyum
Maa veeraraay vilanga vallaaviyae iranga. – tharunam
3. Aaviyin kaniyennum anpaathi kunangalai
Anuthinamum ivar annikala maayanninthu,
Maevum thirumanthaiyai maeyththu valarkka nalla
Maeypparae, anpin aavi vaayppaay ivaril thanga. – tharunam
4. Aekkam aaththuma thaakam itaividaamal atainthu
Ookkaththudanae ivar oyaamal jepiththida,
Vaakkuk kadangaap perumoochchotae emakkaaka
Mantadum jepa aavi ententum nirampida. – tharunam
5. Maasukalara ummil vaasamaaka nilaiththu
Maapannivaay untham makimaiyai nitham thaedath,
Thaesuraு arulnaathaa, thaasar ullaththinintu
Jeevanathikal otich selvam poliyach seyya. – tharunam
PowerPoint Presentation Slides for the song Tharunam Ithil Yesuparanae – தருணம் இதில் யேசுபரனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download தருணம் இதில் யேசுபரனே PPT
Tharunam Ithil Yesuparanae PPT

