Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே
தூயகம் ஊறிய பக்தியால் நாமே – தோத்திர

பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி
பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் – தோத்திர

பனித்துளி நிலத்தினைப் பண்படுத்தினதன்றே
பகருமுகில் கொழுமைப் படுத்திய தெண்ணிநன்றே – தோத்திர

கடவுளே பயிருக்குக் கனமழை பெய்வித்தாரே
காங்கையால் கதிர்வளம் கதிக்கவும் உய்வித்தாரே-தோத்திர

நெஞ்சத்தில் தெய்வஅன்பாம் நிதிநிகர் விதைபெய்து
நித்திய சமாதானம் நிறுவ விண் ணப்பம்செய்து-தோத்திர

இறைவன் இரத்தக் கையால் இரட்சண்யம் அருள்வித்தை
இதயத்தில் விதைத்ததற் கின்குணப் பலன்வைத்துத் – தோத்திர

Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே Lyrics in English

Thoththirap panntikai aasarippomae thooyakam ooriya pakthiyaal naamae – thoththira paaththiram ithuvenap pakarudal porulaavi paramanuk karppananj sey parivu niraiya maevith – thoththira paniththuli nilaththinaip pannpaduththinathante pakarumukil kolumaip paduththiya thennnninante – thoththira kadavulae payirukkuk kanamalai peyviththaarae kaangaiyaal kathirvalam kathikkavum uyviththaarae-thoththira nenjaththil theyvaanpaam nithinikar vithaipeythu niththiya samaathaanam niraுva vinn nappamseythu-thoththira iraivan iraththak kaiyaal iratchannyam arulviththai ithayaththil vithaiththathar kinkunap palanvaiththuth – thoththira

PowerPoint Presentation Slides for the song Thothira Pandikai Aasaripomae – தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே PPT
Thothira Pandikai Aasaripomae PPT

தோத்திர தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே தூயகம் ஊறிய பக்தியால் நாமே பாத்திரம் இதுவெனப் பகர்உடல் பொருளாவி பரமனுக் கர்ப்பணஞ் செய் பரிவு நிறைய மேவித் பனித்துளி English