Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம்

உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் -utchitha Pattanam patchamudan selluvom

பல்லவி
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்;-
விரைந்தோடி நடவடி, உத்தம புத்திரி,-
உச்சித பட்டணம் பட்சமுடன் செலுவோம்.

அனுபல்லவி
நிச்சயமாதவே ரட்சகர் செப்புரை
நீணிலம் தோன்றும் முனாடி,-நம்
நித்திய பிதாவே ஆயத்தமாய் நாட்டிய
நீதியின் பட்டணம், ஆதிபன் கட்டடம்,
நிண்ணய மா நகரம்-திடத்திடு
உன்னதமே சிகரம்;-நமின் பிரிய
நேசர் கிறிஸ்து மேல் பாசம் மிகுத் தவர்
நேரே செலும் நவ சாலேம் நகர் என்ற. – உச்சி

சரணங்கள்

1. சித்தமாய் உச்சித பட்டணம் பற்றியே,
செப்புகிறாய் எனின் தாயே;-அதில்
சேர்ந்திடு பிள்ளைகள் வாழ்ந்துறும் பாக்கியம்,
திட்ட அரிதாம், என் தாயே;-புது
வித்தக மா நகர் ரத்னப் பளிங்கு
விளக்கொளி மேவும், நன்றாயே;-அந்த
விஞ்சையர் பட்டணம் எங்கே இருக்கும்?
விளிம்பி விரி, என் பேராயே;
இத்தரை மீதிலோ அத்திரி வானிலோ?
இட்டமாய் யாம் அதற் கெட்டி நடவமோ?
எங்கே இருக்கு தம்மா?-கவலை அற்
றங் கிருப்போமே, சும்மா,-சரி சரி,
இன்பக் கண்ணாட்டியே, அன்புப் புதல்வியே,
எங்கிருக்கு தென்றன் தங்கமே, சொல்கிறேன். – உச்சி

2. உன்னத வானிலிருந் திறங்கும் அவ்வெ
ருசலேம் பட்டணம் கண்டு,-வெகு
ஊக்கமுடன் அதைப் பார்க்கப் புறப்பட்டு,
ஓசன்னாவும் பாடிக் கொண்டு,-அங்கே
பன்னிரு வாசலும் கண்ணாடி வீதியும்
பானொளிக் கற்களும் உண்டு,-அந்தப்
பட்டணம் தேவாட்டுக் குட்டியின் ஆசனம்
பண்பாக மத்தியில் கொண்டு,
மின்னும் விளக்குகள், தீவட்டிகள் இல்லை;
விண்ணில் சூரிய சந்திரரும் இல்லை;
மெய்ப்பொழு தானவரே-அதன் விளக்
கெப்பொழுதும் அவரே;-அலங்க்ருத
மேன்மைப்பிரகாசப் பான்மையின் நீதியர்
மேனி மினுங்கிடத் தோணி இலங்கிடு. – உச்சி

உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் -Utchitha Pattanam Patchamudan Selluvom Lyrics in English

Uchchitha pattanam patchamudan selluvom -utchitha Pattanam patchamudan selluvom pallavi uchchitha pattanam patchamudan seluvom;- virainthoti nadavati, uththama puththiri,- uchchitha pattanam patchamudan seluvom. Anupallavi nichchayamaathavae ratchakar seppurai neennilam thontum munaati,-nam niththiya pithaavae aayaththamaay naattiya neethiyin pattanam, aathipan kattadam, ninnnaya maa nakaram-thidaththidu unnathamae sikaram;-namin piriya naesar Kristhu mael paasam mikuth thavar naerae selum nava saalaem nakar enta. – uchchi saranangal 1. Siththamaay uchchitha pattanam pattiyae, seppukiraay enin thaayae;-athil sernthidu pillaikal vaalnthuraுm paakkiyam, thitta arithaam, en thaayae;-puthu viththaka maa nakar rathnap palingu vilakkoli maevum, nantayae;-antha vinjaiyar pattanam engae irukkum? Vilimpi viri, en paeraayae; iththarai meethilo aththiri vaanilo? Ittamaay yaam athar ketti nadavamo? Engae irukku thammaa?-kavalai ar rang kiruppomae, summaa,-sari sari, inpak kannnnaattiyae, anpup puthalviyae, engirukku thentan thangamae, solkiraேn. – uchchi 2. Unnatha vaanilirun thirangum avve rusalaem pattanam kanndu,-veku ookkamudan athaip paarkkap purappattu, Hosannavum paatik konndu,-angae panniru vaasalum kannnnaati veethiyum paanolik karkalum unndu,-anthap pattanam thaevaattuk kuttiyin aasanam pannpaaka maththiyil konndu, minnum vilakkukal, theevattikal illai; vinnnnil sooriya santhirarum illai; meyppolu thaanavarae-athan vilak keppoluthum avarae;-alanga்rutha maenmaippirakaasap paanmaiyin neethiyar maeni minungidath thonni ilangidu. – uchchi

PowerPoint Presentation Slides for the song உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் -Utchitha Pattanam Patchamudan Selluvom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உச்சித பட்டணம் பட்சமுடன் செல்லுவோம் PPT
Utchitha Pattanam Patchamudan Selluvom PPT

பட்டணம் உச்சித பட்சமுடன் உச்சி செலுவோம் மா நகர் எங்கே இல்லை செல்லுவோம் utchitha Pattanam patchamudan selluvom பல்லவி விரைந்தோடி நடவடி உத்தம புத்திரி English