உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறை திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்ல பிதாவின் செயலிதுவே – உயிர்
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே – உயிர்
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கினாரே
எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
எல்லையில்லாப் பரமானந்தமே – உயிர்
4. மரணமுன் கூர் எங்கே?
பாதாள முன் ஜெய மெங்கே?
சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம் – உயிர்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
அல்லேலுயா துதி சாற்றிடுவோம் – உயிர்
6. பரிசுத்தமாகுதலை
பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே – உயிர்
Uyirthezhundhaarae Allaelooyaa Lyrics in English
Uyirththelunthaarae Alleluya
Jeyiththelunthaarae
Uyirudan eluntha meetpar iyaesen
Sonthamaanaarae
1. Kallarai thiranthidavae
Kadum sevakar payanthidavae
Vallavar Yesu uyirththelunthaarae
Valla pithaavin seyalithuvae – uyir
2. Mariththavar maththiyilae
Jeeva thaevanaith thaeduvaaro?
Neethiyin athipathi uyirththelunthaarae
Niththiya nampikkai perukiduthae – uyir
3. Emmaa oor seesharkalin
Ellaa mana irul neekkinaarae
Emmanak kalakkangal neenginathaalae
Ellaiyillaap paramaananthamae – uyir
4. Maranamun koor engae?
Paathaala mun jeya mengae?
Saavaiyum Nnoyaiyum paeyaiyum jeyiththaar
Sabaiyorae thuthi saattiduvom – uyir
5. Aaviyaal intum entum
Aa emmaiyum uyirppikkavae
Aaviyin achchaாram enakkaliththaarae
Allaeluyaa thuthi saattiduvom – uyir
6. Parisuththamaakuthalai
Payaththodentum kaaththukkolvom
Ekkaalam thonikkaiyil maraுroopamaaka
Elumpuvomae makimaiyilae – uyir
PowerPoint Presentation Slides for the song Uyirthezhundhaarae Allaelooyaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா PPT
Uyirthezhundhaarae Allaelooyaa PPT

