பல்லவி
வா வா பாவி அழைக்கிறார் இயேசு
ஆவலாய் தம்மிடம் – ஆ ஆ ஆ
அனுபல்லவி
தேவ குமாரன் தானே
தேடியுனை அலைந்தாரே
தேவ கோபம் வருமுன்னே
ஜீவன் பெறத் தடை என்ன? – வா வா
சரணங்கள்
1. தன்னிடம் வருவோர் எவரானாலும்
தள்ள மாட்டார் இயேசு
உன்னிடம் அன்போடவர்க்கு
உருக்கமும் உண்டு அதற்கு
உண்மையான அத்தாட்சி
தன்னைக் கொடுத்ததே சாட்சி – வா வா
2. வருந்தி நீ பாவப்பாரம் சுமப்பதைப்
பார்க்கச் சகிக்காமல்
வருந்தி அழைக்கிறார் இயேசு
வந்து அவரிடம் பேசு
திருந்தி மனங் கொண்டு வந்தால்
அறிந்திடுவாய் அவரன்பை – வா வா
3. கல்மனமோ கல்வாரியைக் கண்டும்
கரையாதோ உன் உள்ளம்
நில் சிலுவையண்டை சற்றே
நீசக் கோலம் தான் உற்றே
நீசன் உன்னையே மீட்டாரே
பாசமாய் அழைக்கிறார் தாமே – வாவா
4. ஆனந்த பாக்கியம் நீ அடைந்திடுவாய்
அவர் பிள்ளையாகும்போது
கானம் இசைத்து நீ மகிழ்வாய்
கர்த்தரின் நாமம் புகழ்வாய்
தானங்கள் பலவுவே பெறுவாய்
வானவர் வரவில் இன்புறுவாய் – வா வா
வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va Va Paavi Azhaikiraaar Yesu Lyrics in English
Pallavi vaa vaa paavi alaikkiraar Yesu aavalaay thammidam – aa aa aa anupallavi thaeva kumaaran thaanae thaetiyunai alainthaarae thaeva kopam varumunnae jeevan perath thatai enna? – vaa vaa saranangal 1. Thannidam varuvor evaraanaalum thalla maattar Yesu unnidam anpodavarkku urukkamum unndu atharku unnmaiyaana aththaatchi thannaik koduththathae saatchi – vaa vaa 2. Varunthi nee paavappaaram sumappathaip paarkkach sakikkaamal varunthi alaikkiraar Yesu vanthu avaridam paesu thirunthi manang konndu vanthaal arinthiduvaay avaranpai – vaa vaa 3. Kalmanamo kalvaariyaik kanndum karaiyaatho un ullam nil siluvaiyanntai satte neesak kolam thaan utte neesan unnaiyae meettarae paasamaay alaikkiraar thaamae – vaavaa 4. Aanantha paakkiyam nee atainthiduvaay avar pillaiyaakumpothu kaanam isaiththu nee makilvaay karththarin naamam pukalvaay thaanangal palavuvae peraுvaay vaanavar varavil inpuraுvaay – vaa vaa
PowerPoint Presentation Slides for the song வா வா பாவி அழைக்கிறார் இயேசு – Va Va Paavi Azhaikiraaar Yesu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா வா பாவி அழைக்கிறார் இயேசு PPT
Va Va Paavi Azhaikiraaar Yesu PPT

