Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வா பாவி இளைப்பாற வா

1. வா, பாவி, இளைப்பாற வா,
என் திவ்விய மார்பிலே
நீ சாய்ந்து சுகி, என்பதாய்
நல் மீட்பர் கூறவே;
இளைத்துப்போன நீசனாய்
வந்தாறித் தேறினேன்;
என் பாரம் நீங்கி, இயேசுவால்
சந்தோஷமாயினேன்.

2. வா, பாவி, தாகந்தீர வா,
தாராளமாகவே
நான் ஜீவ தண்ணீர் தருவேன்,
என்றார் என் நாதரே;
அவ்வாறு ஜீவ ஊற்றிலே
நான் பானம்பண்ணினேன்;
என் தாகம் தீர்ந்து பலமும்
பேர் வாழ்வும் அடைந்தேன்.

3. வா, பாவி, இருள் நீங்க வா;
நான் லோக ஜோதியே,
உன் நெஞ்சில் ஒளி வீசுவேன்,
என்றார் என் நேசரே;
மெய்ஞான அருணோதயம்
அவ்வாறு நான் கண்டேன்
அஜ்ஜோதியில் சந்தோஷமாய்
நான் என்றும் ஜீவிப்பேன்.

Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா Lyrics in English

1. Vaa, paavi, ilaippaara vaa, en thivviya maarpilae nee saaynthu suki, enpathaay nal meetpar kooravae; ilaiththuppona neesanaay vanthaarith thaerinaen; en paaram neengi, Yesuvaal santhoshamaayinaen. 2. Vaa, paavi, thaakantheera vaa, thaaraalamaakavae naan jeeva thannnneer tharuvaen, entar en naatharae; avvaaraு jeeva oottilae naan paanampannnninaen; en thaakam theernthu palamum paer vaalvum atainthaen. 3. Vaa, paavi, irul neenga vaa; naan loka jothiyae, un nenjil oli veesuvaen, entar en naesarae; meynjaana arunnothayam avvaaraு naan kanntaen ajjothiyil santhoshamaay naan entum jeevippaen.

PowerPoint Presentation Slides for the song Vaa Paavi Illaippaara Vaa – வா பாவி இளைப்பாற வா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வா பாவி இளைப்பாற வா PPT
Vaa Paavi Illaippaara Vaa PPT

வா பாவி ஜீவ என்றார் அவ்வாறு இளைப்பாற திவ்விய மார்பிலே சாய்ந்து சுகி என்பதாய் நல் மீட்பர் கூறவே இளைத்துப்போன நீசனாய் வந்தாறித் தேறினேன் பாரம் English