Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வேறு ஜென்மம் வேணும்

பல்லவி

வேறு ஜென்மம் வேணும்,-மனம்
மாறுதலாகிய உள்ள சுத்தி என்னும்

சரணங்கள்

1. கூறு பரிசுத்தர் மாறிலா தேவனின்
தேறுதலான விண்பேறு பெற இங்கே; – வேறு

2. பாவசுபாவமும் ஜீவியமும் மாறத்
தேவனின் சாயலை மேவுவதாகிய; – வேறு

3. மானிடரின் அபிமானத்தினாலல்ல,
வானவரின் கிருபா தானமாய் வரும்; – வேறு

4. ஒன்றான ரட்சகர் வென்றியை நம்பி,
மன்றாடுவோருக்கு ஒன்றுவதாகிய; – வேறு

5. மைந்தர் கெடாமல் உகந்து ஈடேறவே,
சொந்த மகன்தனைத் தந்த பிதா அருள்; – வேறு

6. மண்ணினில் பத்தராய் நண்ணி நடக்கவும்,
விண்ணினில் தூயராய் தண்ணளி கொள்ளவும்; – வேறு

Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும் Lyrics in English

Pallavi

Vaeraு jenmam vaenum,-manam
Maaraுthalaakiya ulla suththi ennum

Saranangal

1. Kooraு Parisuththar maarilaa thaevanin
Thaeraுthalaana vinnpaeraு pera ingae; – vaeraு

2. Paavasupaavamum jeeviyamum maarath
Thaevanin saayalai maevuvathaakiya; – vaeraு

3. Maanidarin apimaanaththinaalalla,
Vaanavarin kirupaa thaanamaay varum; – vaeraு

4. Ontana ratchakar ventiyai nampi,
Mantaduvorukku ontuvathaakiya; – vaeraு

5. Mainthar kedaamal ukanthu eetaeravae,
Sontha makanthanaith thantha pithaa arul; – vaeraு

6. Mannnninil paththaraay nannnni nadakkavum,
Vinnnninil thooyaraay thannnali kollavum; – vaeraு

PowerPoint Presentation Slides for the song Veru Jenmam Venum – வேறு ஜென்மம் வேணும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வேறு ஜென்மம் வேணும் PPT
Veru Jenmam Venum PPT

தேவனின் பல்லவி ஜென்மம் வேணும்மனம் மாறுதலாகிய சுத்தி சரணங்கள் கூறு பரிசுத்தர் மாறிலா தேறுதலான விண்பேறு பெற பாவசுபாவமும் ஜீவியமும் மாறத் சாயலை மேவுவதாகிய மானிடரின் English