Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசுநாதா உன் அடைக்கலமே

ஏசுநாதா உன் அடைக்கலமே

பல்லவி

அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!

அனுபல்லவி

திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு. – அடை

சரணங்கள்

1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமொடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! – அடை

2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழைக் கெஞ்சுதல் கேளய்யனே! – அடை

3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சல மகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! – அடை

4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதினில் எனக்கும் பங்கில்லையோ?
அன்றுனது பக்கமதில் ஆயிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? – அடை

Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே Lyrics in English

Aesunaathaa un ataikkalamae pallavi ataikkalam ataikkalamae, Yesunaathaa, un ataikkalam ataikkalamae! Anupallavi thidanattaுp pelanattaுn atiyuttalum aelaikku. – atai saranangal 1. Aasaiyodu paavamathil alainthu thirinthaenae, anpulla pithaa unai vittakantu pirinthaenae; mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae thoshamodu sernthanan thuraththidaathu serththarul! – atai 2. Kattuppadaak kaayamathin ketta ranam polavae mattuppadaap paavamathil mayangi uranginaen; kettavanae povenak kilaththinum niyaayamae, kittivanthalaraுm aelaik kenjuthal kaelayyanae! – atai 3. Sinthiya uthiramathum ainthu thirukkaayamum nonthuru kenathumanach sanjala makattidum; panthamikum paavi entan kenjidung karaththinai enthavithamun thallaamal irangidu maiyanae! – atai 4. Ennidaththil varuvorai enthavithamum thallaen entu sonna vaakkathinil enakkum pangillaiyo? Antunathu pakkamathil aayiruntha kallanukku intupara theesiliruppaa yenturaiththaa yallavo? – atai

PowerPoint Presentation Slides for the song Yesunaatha Un Adaikalamae – ஏசுநாதா உன் அடைக்கலமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசுநாதா உன் அடைக்கலமே PPT
Yesunaatha Un Adaikalamae PPT

அடை அடைக்கலமே அடைக்கலம் பாவமதில் ஏசுநாதா பல்லவி இயேசுநாதா அனுபல்லவி திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு சரணங்கள் ஆசையோடு அலைந்து திரிந்தேனே அன்புள்ள பிதா உனை English