கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது.
துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்.
சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை.
அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
is is | זֶ֣בַח | zebaḥ | ZEH-vahk |
The sacrifice the | רְ֭שָׁעִים | rĕšāʿîm | REH-sha-eem |
wicked of an | תּוֹעֲבַ֣ת | tôʿăbat | toh-uh-VAHT |
abomination Lord: the | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
to but the | וּתְפִלַּ֖ת | ûtĕpillat | oo-teh-fee-LAHT |
prayer upright the | יְשָׁרִ֣ים | yĕšārîm | yeh-sha-REEM |
of his delight. | רְצוֹנֽוֹ׃ | rĕṣônô | reh-tsoh-NOH |