அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி:
எண்ணாகமம் 26:2இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்ததிற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார்.
எண்ணாகமம் 26:3அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி:
எண்ணாகமம் 26:4கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள்.
எண்ணாகமம் 26:5ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனாக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லுூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லுூவும்,
எண்ணாகமம் 26:6எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே.
எண்ணாகமம் 26:7இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர்.
எண்ணாகமம் 26:8பல்லுூவின் குமாரன் எலியாப்.
எண்ணாகமம் 26:9எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
எண்ணாகமம் 26:10பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பது பேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள்.
எண்ணாகமம் 26:11கோராகின் குமாரரோ சாகவில்லை.
எண்ணாகமம் 26:12சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:13சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:14இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
எண்ணாகமம் 26:15காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான் சூனியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:16ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:17ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:18இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
எண்ணாகமம் 26:19யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள்.
எண்ணாகமம் 26:20யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:21பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:22இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
எண்ணாகமம் 26:23இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:24யாசூபின் சந்ததியான யாசூபியரின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:25இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர்.
எண்ணாகமம் 26:26செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:27இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர்.
எண்ணாகமம் 26:28யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
எண்ணாகமம் 26:29மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்: மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:30கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேயரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:31அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:32செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:33ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல் இருந்தார்கள், குமாரத்திகள் மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள்.
எண்ணாகமம் 26:34இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
எண்ணாகமம் 26:35எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:36சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:37இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள்.
எண்ணாகமம் 26:38பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:39சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:40பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:41இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறு பேர்.
எண்ணாகமம் 26:42தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமுமே; இவைகள் தாணின் குடும்பம்.
எண்ணாகமம் 26:43சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லோரும் அறுபத்து நாலாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26:44ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:45பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே,
எண்ணாகமம் 26:46ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
எண்ணாகமம் 26:47இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26:48நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும்,
எண்ணாகமம் 26:49எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே.
எண்ணாகமம் 26:50இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறு பேர்.
எண்ணாகமம் 26:51இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள்.
எண்ணாகமம் 26:52கர்த்தர் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 26:53இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும்.
எண்ணாகமம் 26:54அநேகம்பேருக்கு அதிக சுதந்திரமும் கொஞ்சம்பேருக்கு கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத் தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.
எண்ணாகமம் 26:55ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.
எண்ணாகமம் 26:56அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார்.
எண்ணாகமம் 26:57எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்;
எண்ணாகமம் 26:58லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான்.
எண்ணாகமம் 26:59அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள்.
எண்ணாகமம் 26:60ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள்.
எண்ணாகமம் 26:61நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள்.
எண்ணாகமம் 26:62அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.
எண்ணாகமம் 26:63மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே.
எண்ணாகமம் 26:64முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை.
எண்ணாகமம் 26:65வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.