மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்தநாளில்,
எண்ணாகமம் 7:2தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.
எண்ணாகமம் 7:3தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 7:4அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 7:5நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத்தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.
எண்ணாகமம் 7:6அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7:7இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7:8நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.
எண்ணாகமம் 7:9கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.
எண்ணாகமம் 7:10பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.
எண்ணாகமம் 7:11அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக, ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.
எண்ணாகமம் 7:12அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.
எண்ணாகமம் 7:13அவன் காணிக்கையாவது: போஜனபலியாக படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:14தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:15சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:16பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:17சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை.
எண்ணாகமம் 7:18இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:19அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:20தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:21சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:22பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:23சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7:24மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:25அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல்நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:26தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:27சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:28பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:29சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை.
எண்ணாகமம் 7:30நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை, செலுத்தினான்.
எண்ணாகமம் 7:31அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:32தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:33சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:34பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:35சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை.
எண்ணாகமம் 7:36ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:37அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:38தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:39சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:40பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:41சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலுூமியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7:42ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:43அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:44தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:45சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:46பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:47சமாதானபலியாக இரண்டு மாடுகளும் ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும் ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை.
எண்ணாகமம் 7:48ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:49அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:50தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:51சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:52பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:53சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை.
எண்ணாகமம் 7:54எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:55அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெய் பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:56தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:57சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:58பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:59சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7:60ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:61அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:62தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:63சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:64பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:65சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை.
எண்ணாகமம் 7:66பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:67அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:68தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:69சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:70பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:71சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை.
எண்ணாகமம் 7:72பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:73அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:74தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:75சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:76பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:77சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை.
எண்ணாகமம் 7:78பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான்.
எண்ணாகமம் 7:79அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரρ வெӠύளிՠύகலமும் ஆகிய இவ்விரண்டும்,
எண்ணாகமம் 7:80தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,
எண்ணாகமம் 7:81சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஆட்டுக்குட்டியும்,
எண்ணாகமம் 7:82பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,
எண்ணாகமம் 7:83சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை.
எண்ணாகமம் 7:84பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு.
எண்ணாகமம் 7:85ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது.
எண்ணாகமம் 7:86தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது.
எண்ணாகமம் 7:87சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு.
எண்ணாகமம் 7:88சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதானஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே.
எண்ணாகமம் 7:89மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.