அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச்சுற்றிலும் அளந்தார்.
எசேக்கியேல் 42:16கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறுகோலாயிருந்தது.
எசேக்கியேல் 42:17வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறுகோலாய் அளந்தார்.
எசேக்கியேல் 42:18தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
எசேக்கியேல் 42:19மேற்றிசைப் பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார்.
எசேக்கியேல் 42:20நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.