கர்த்தர் மோசேயை நோக்கி:
எண்ணாகமம் 6:2நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால்,
எண்ணாகமம் 6:3அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும்,
எண்ணாகமம் 6:4தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன்.
எண்ணாகமம் 6:5அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.
எண்ணாகமம் 6:6அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக் கூடாது.
எண்ணாகமம் 6:7அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது.
எண்ணாகமம் 6:8அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
எண்ணாகமம் 6:9அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேயவிரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு,
எண்ணாகமம் 6:10எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன்.
எண்ணாகமம் 6:11அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.
எண்ணாகமம் 6:12அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும்.
எண்ணாகமம் 6:13நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து,
எண்ணாகமம் 6:14சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,
எண்ணாகமம் 6:15ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன்.
எண்ணாகமம் 6:16அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி,
எண்ணாகமம் 6:17ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதானபலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக.
எண்ணாகமம் 6:18அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்.
எண்ணாகமம் 6:19நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து,
எண்ணாகமம் 6:20அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம்.
எண்ணாகமம் 6:21பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார்.