பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள்.
சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது.
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.
அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள்.
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள்.
அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்: அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்து கொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான்.
கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார்.
நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றைய தினம் உனக்கு இந்தப் பிரகாரமாகச் செய்தார்.
அந்தணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான்.
அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக: அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள்.
places that | וְהִנֵּ֨ה | wĕhinnē | veh-hee-NAY |
am | אָֽנֹכִ֜י | ʾānōkî | ah-noh-HEE |
And, behold, | עִמָּ֗ךְ | ʿimmāk | ee-MAHK |
I with will keep | וּשְׁמַרְתִּ֙יךָ֙ | ûšĕmartîkā | oo-sheh-mahr-TEE-HA |
and thee, in | בְּכֹ֣ל | bĕkōl | beh-HOLE |
all thee | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
whither goest, | תֵּלֵ֔ךְ | tēlēk | tay-LAKE |
thou and will bring thee | וַהֲשִׁ֣בֹתִ֔יךָ | wahăšibōtîkā | va-huh-SHEE-voh-TEE-ha |
again | אֶל | ʾel | el |
into | הָֽאֲדָמָ֖ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
land; | הַזֹּ֑את | hazzōt | ha-ZOTE |
this | כִּ֚י | kî | kee |
for I will | לֹ֣א | lōʾ | loh |
not | אֶֽעֱזָבְךָ֔ | ʾeʿĕzobkā | eh-ay-zove-HA |
leave | עַ֚ד | ʿad | ad |
until | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
thee, done have | אִם | ʾim | eem |
I | עָשִׂ֔יתִי | ʿāśîtî | ah-SEE-tee |
which | אֵ֥ת | ʾēt | ate |
thee to spoken | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
have I of. | דִּבַּ֖רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
לָֽךְ׃ | lāk | lahk |