சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.
நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இயேசுவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள்.
பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவாம்.
நாம் விழித்திருப்பவர்களானாலும் நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே.
ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள்.
அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள்.
பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்.
சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள்.
இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்.
were And | וַיְהִ֖י | wayhî | vai-HEE |
all the | כָּל | kāl | kahl |
days Enoch | יְמֵ֣י | yĕmê | yeh-MAY |
of | חֲנ֑וֹךְ | ḥănôk | huh-NOKE |
five | חָמֵ֤שׁ | ḥāmēš | ha-MAYSH |
and | וְשִׁשִּׁים֙ | wĕšiššîm | veh-shee-SHEEM |
sixty | שָׁנָ֔ה | šānâ | sha-NA |
וּשְׁלֹ֥שׁ | ûšĕlōš | oo-sheh-LOHSH | |
three hundred | מֵא֖וֹת | mēʾôt | may-OTE |
years: | שָׁנָֽה׃ | šānâ | sha-NA |