அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
அடைக்கலம் அடைக்கலமே!
திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு — அடைக்கலம்
1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! —அடைக்கலம்
2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! — அடைக்கலம்
3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! — அடைக்கலம்
4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? — அடைக்கலம்
Ataikkalam Ataikkalamae, Yesunaathaa Lyrics in English
Ataikkalam ataikkalamae , Yesu naathaa, un ataikkalam ataikkalamae! Thidanattaுp pelanattaுn atiyuttalum aelaikku — ataikkalam 1. Aasaiyodu paavamathil alainthu thirinthaenae, anpulla pithaa unai vittakantu pirinthaenae; mosamathai yaeyalaal mattaொntaiyum kaannaamalae thoshamodu sernthanan thuraththidaathu serththarul! —ataikkalam 2. Kattuppadaak kaayamathin ketta ranam polavae mattuppadaap paavamathil mayangi uranginaen; kettavanae povenak kilaththinum niyaayamae, kittivanthalaraுm aelai kenjuthal kaelayyanae! — ataikkalam 3. Sinthiya uthiramathum ainthu thirukkaayamum nonthuru kenathumanach sanjalamakattidum; panthamikum paavi entan kenjidung karaththinai enthavithamun thallaamal irangidu maiyanae! — ataikkalam 4. Ennidaththil varuvorai enthavithamum thallaen entu sonna vaakkathanil enakkum pangillaiyo antunathu pakkamathil aakiyiruntha kallanukku intupara theesiliruppaa yenturaiththaa yallavo? — ataikkalam
PowerPoint Presentation Slides for the song Ataikkalam Ataikkalamae, Yesunaathaa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அடைக்கலம் அடைக்கலமே இயேசு நாதா உன் PPT
Ataikkalam Ataikkalamae PPT

