Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

கிருபையிதே தேவ கிருபையிதே

கிருபையிதே தேவ கிருபையிதே
தாங்கி நடத்தியதே
இயேசுவிலே பொன் நேசரிலே
அகமகிழ்ந்தே நாம் ஆனந்திப்போம்

1. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்
வியாதியும் வேதனையும் வைத்தியராய்
இயேசுவல்லால் சார்ந்திடவோ
இகமதில் வேறெமக் காருமில்லை – கிருபையிதே

2. அன்பின் அகலமும் நீளம் உயரமும்
ஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்
கிறிஸ்துவிலே ஒரு மனையாய்
சிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் – கிருபையிதே

3. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே
நித்திய ஜீவனை நாம் பெற்றிடவே
விசுவாசத்தில் நிலைத்திடுவோம்
அசையாது அழைப்பினைக் காத்துக் கொள்வோம் – கிருபையிதே

4. ஆருயிர் அன்பராய் எங்களுடனே
ஜீவியப் பாதையிலே – இயேசு பரன்
அனுதினமும் வழி நடந்தே
அவரது நாமத்தில் காத்தனரே – கிருபையிதே

5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்
வாருமென்றழைக்கின்றாரே – வாருமென்பீர்
சீயோனே நீ பார் உனக்காய்
நாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் – கிருபையிதே

Kirubaiyidhey Deva Kirubaiyidhey – கிருபையிதே தேவ கிருபையிதே Lyrics in English

Kirupaiyithae thaeva kirupaiyithae thaangi nadaththiyathae Yesuvilae pon naesarilae akamakilnthae naam aananthippom 1. Vaarththaiyinaal avar theerththaar enthan viyaathiyum vaethanaiyum vaiththiyaraay Yesuvallaal saarnthidavo ikamathil vaeraெmak kaarumillai – kirupaiyithae 2. Anpin akalamum neelam uyaramum aalamum arinthunara – anukkirakiththaar Kristhuvilae oru manaiyaay sirushtiththae niraுththinaar avar sutharaay – kirupaiyithae 3. Nalla poraattam poraati jeyiththae niththiya jeevanai naam pettidavae visuvaasaththil nilaiththiduvom asaiyaathu alaippinaik kaaththuk kolvom – kirupaiyithae 4. Aaruyir anparaay engaludanae jeeviyap paathaiyilae – Yesu paran anuthinamum vali nadanthae avarathu naamaththil kaaththanarae – kirupaiyithae 5. Aaviyum manavaattiyum aavaludan vaarumentalaikkintarae – vaarumenpeer seeyonae nee paar unakkaay naayakan Yesu thaam velippaduvaar – kirupaiyithae

PowerPoint Presentation Slides for the song Kirubaiyidhey Deva Kirubaiyidhey – கிருபையிதே தேவ கிருபையிதே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download கிருபையிதே தேவ கிருபையிதே PPT
Kirubaiyidhey Deva Kirubaiyidhey PPT

கிருபையிதே இயேசு தேவ தாங்கி நடத்தியதே இயேசுவிலே பொன் நேசரிலே அகமகிழ்ந்தே ஆனந்திப்போம் வார்த்தையினால் தீர்த்தார் எந்தன் வியாதியும் வேதனையும் வைத்தியராய் இயேசுவல்லால் சார்ந்திடவோ இகமதில் English